NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

AADHAR-PAN இணைக்க 31/08/2017கடைசி... எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!

NO EXTENSION FOR AADHAR-PAN LINKING : 31.08.2017 IS LAST DATE

பான் எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.


இதயைடுத்து பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த காலக்கெடு  நாளையுடன் முடிவடைய உள்ளது. எனவே, இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், உங்களுடைய மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் எளிதாக இணைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதது மட்டுமல்லாது, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.


எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!


மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் இணைக்கும் வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து இருந்தது. இதன்படி, உங்கள் மொபைல் போனில் UIDPAN என அடித்து, ஒரு எழுத்து இடைவெளி விட்டு, முதலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் ஓர் எழுத்து இடைவெளி விட்டு, பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். அதை 56161 அல்லது 567678 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பினால் உடனே பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு விடும்.


உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற முகவரிக்கு SMS அனுப்புங்கள்


UIDPAN<ஒரு எழுத்து இடைவெளி><12 இலக்க ஆதார் எண்><ஒரு எழுத்து இடைவெளி><10 இலக்க பான் எண்>


உதாரணம்: UIDPAN 123456789123 AKPLM2124M




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive