NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BREAKING NEWS - கல்வி செயலர் உதயச்சந்திரனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை


தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் வரை . எவரையும் மாற்ற கூடாது ..


கல்வி செயலர் உதயச்சந்திரனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை ...


  

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தமிழக மாநிலப் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் யாரையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்ற தவல்கள் வெளியான நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த பொது நலன் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், என் மகன் அடுத்த ஆண்டு 11ம் வகுப்புக்கு செல்லவிருக்கிறார். எனவே அவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியாக வலுவான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுக்களை நீதிமன்ற கண்காணிப்பில் இயக்க வேண்டும் என்றும், அதில் இடம்பெறும் யாரையும் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில், வழக்கு ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறினார்.

அப்போது, பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை அவரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

தனியார் பள்ளிகளின் அழுத்தம் காரணமாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், பொது நலன் வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியிருப்பது சமூக ஆர்வலர்களால் வரவேற்பைப் பெற்றுள்ளது.




8 Comments:

  1. அரசுக்கு இதை விட அவமானம் தேவையில்லை.

    ReplyDelete
  2. Good. Expect good verdict in 11th public exam case.

    ReplyDelete
  3. நாளை விவாதம்
    செங்கோட்டையன் vs அன்புமணி
    ??????????????????????????????

    ReplyDelete
  4. " தனியார் பள்ளிகளின் அழுத்தம் காரணமாக செயலர் பணியிட மாற்றம்" - என்ற தகவல் சொல்வது என்னவென்றால், கல்வியை விற்று காசாக்கும் கயவர்களின் கைகளில் கல்வி இருக்கும்வரை ஏழைக்கு கல்வி எட்டாக் கனிதான். ஏ இந்திய அரசாங்கமே..! நேர்மையானவர்களை நினைத்தால் இடமாற்றம் செய்யும் சட்டத்தை மாற்று, இது மக்களின் கட்டளை...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive