NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் !!

பருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவில் இதனை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகள் உள்ளன என்பது ஒரு நல்ல செய்தியாகும்.

இந்த வகை உணவுகளில் உள்ள மூலப் பொருட்கள் நோயெதிர்ப்பை அதிகரிக்கவும் ஒவ்வாமையை குறைக்கவும் உதவியாக இருகின்றன.

வீட்டின் சமையலறையில் கிடைக்கும் இந்த பொருட்களை கொண்டு உடல் ஒவ்வாமையை அகற்றி இன்பமாக வாழ்வோம்.

க்ரீன் டீ :

ஆன்டிஹிஸ்டமின் என்பது ஒவ்வாமையை முறிக்கும் ஒரு மருந்து ஆகும். இயற்கையாகவே க்ரீன் டீயில் இந்த மருத்துவ குணம் உள்ளது. இந்த தன்மையால் அலர்ஜி உருவாவது தடுக்கப்படுகிறது. இதனை காலையில் ஒரு கப் அருந்துவதால் தும்மல் போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படும். உடலுக்கு ஒரு சிறந்த அரணாக இந்த க்ரீன் டீ பயன் டுகிறது.

ஆரஞ்சு மற்றும் ஸ்டராபெர்ரி:

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவதற்கு வைட்டமின் சியின் உட்கொள்ளல் மிகவும் அவசியம். ஒரு வைட்டமின் மாத்திரையை உட்கொள்வதற்கு ஈடாக 2 ஆரஞ்சு பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை உட்கொள்ளலாம். இது சிறந்த பயனை கொடுக்கும்.இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும், க்யூயர்சிடின் என்ற பிளவனாய்டும் இருக்கின்றது .

பூண்டு:

அலர்ஜியை ஏற்படுத்தும் ரசாயனத்தை பூண்டு தடுக்கிறது. காலையில் எழுந்ததும் 2 பூண்டு பற்களை சாப்பிடுவது மிகுந்த பலனை கொடுக்கும். குறிப்பாக அலர்ஜி உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக முயற்சிக்கலாம்.


மஞ்சள்:

மஞ்சளுக்கான மகத்துவங்கள் பல இருக்கின்றன. இது வீக்கத்தை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. எல்லா விதமான அலர்ஜிக்களுக்கும் மஞ்சள் ஒரு சிறந்த தீர்வு.


நட்ஸ்:

3 அவுன்ஸ் சால்மன் மீன் உட்கொள்ளலும் 1 கையளவு அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவதும் ஒரே பலனை நல்கும். சைவ உணவை விரும்புகிறவர்கள் அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் உண்பது ஒவ்வாமையை தடுக்க சிறந்த வழியாகும் . ஆளி விதையில் உள்ள செலினியம் என்னும் ஊட்டச்சத்துக்கு ஒவ்வாமையை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது.


காய்கறிகள் :

க்யூயர்சிடின் என்ற பிளவனாய்டு, அலர்ஜியுடன் இணைந்த வீக்கத்தை குறைக்கும். ஆப்பிள், வெங்காயம், பெர்ரி, மற்றும் காலிப்ளவர் போன்றவற்றிலும் இந்த தன்மை உண்டு.


கொழுப்பு நிறைந்த மீன் :

இந்த வகை கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. கானாங்கெளுத்தி , சார்டின் ,சால்மன், டூனா,டிரௌட் பிளூபிஷ் போன்றைவை இந்த வகையில் அடக்கம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒவ்வாமைக்கான அறிக்குறிகளை எதிர்த்து போராடுகிறது. பருவ மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜிகளுக்கு இது சிறந்த தீர்வை தருகிறது.

தேன் :

மகரந்த ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தேன் ஒரு மிக சிறந்த நிவாரணி ஆகும். காலையில் ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் உடலுக்கு சகிப்புத்தன்மை கிடைக்கிறது . எல்லாவித ஒவ்வாமையும் தடுக்கப்படுகிறது .

யோகர்ட் :

யோகர்ட் மாறும் பால் பொருட்களில் ப்ரோபையோடிக் நிறைந்துள்ளன. குடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களாகிய லக்டோபஸில்லஸ் மற்றும் பிபிடோபாக்டீரியம் ஆகியவை இந்த ப்ரோபையோடிக்களில் அடங்கியுள்ளன. இவை நோயெதிர்ப்பை அதிகரித்து உடல் நலத்தை சீராக்கி, ஒவ்வாமையை எதிர்த்து போராட செய்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive