NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குப்பைகளா ???? தமிழக மாணவர்கள் ....

அனிதாஅனிதா. .....
இரண்டு நாட்கள் தலைப்புச்செய்தி
நீ தான் ....




கவலையுடன் அரசியல்தலைவர்கள் மாலை சூடுவர்
இன்றைய இரவு
தொலைக்காட்சி விவாதங்களில்
நார் நாராகக் கிழிக்கப்படுவாய்...
அரசின் உதவித்தொகை
எவ்வளவு என
செய்திதாட்களில் தெரிந்துகொள்ளலாம்.
உன்னை பார்த்தறியாத முகங்கள்
உன் இறுதி ஊர்வலத்தில்
சோகம் சுமக்கும் ....
சமூக வலைதளங்களில்
புரட்சி வெடிக்கும்....
இனிமேல்
கல்வியாளர்களின் கட்டுரைகளால்
உன் பெயரைத் தவிர்க்க முடியாது.
பட்டிமன்ற நடுவர்கள்
உன் புகழ் பாடும் துதிகளாவர் ....
அடி வயிற்றில் நெருப்புகூட்டிய
உணர்வுடன் நடுநிசியில்
பிள்ளைகளின் தலைகோதுவர்
நீட் தேர்வால் தோற்கடிக்கப்பட்ட
தமிழக மாணவர்களின்
தாய்மார்கள்.
மதிப்பெண் எனும் சுழியங்கள்
உன்னை வென்றதொடு
கொன்றுவிட்டதையும்
உள்ளத்தால் ஏற்க முடியாமல்
ஆயுள் தண்டனை அனுபவிக்கப்போவது
உன் தாய் மட்டும்தான் ....
அடுத்த கவலை வரும்வரை
கவிதை செய்வோம்
உன் பெயரால். ....
தூய்மை இந்தியா திட்டத்தால்
துப்புரவு செய்யப்பட வேண்டிய
குப்பைகளா ????
தமிழக மாணவர்கள் ....

 Mr.V.POTHURASA
M3/65 MULLAI NAGER
ARNMANNAIPUTHUR- POST
THENI DIST 625531

 




3 Comments:

  1. அனுதாபங்கள். உண்மையை உணருங்கள் இளைய தலைமுறையே மருத்துவம் மட்டும் வாழ்க்கை அல்ல.உங்களிடம் ஆயிரம் கலாம்கள் இருக்கலாம். வாழ்ந்து காடடுங்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive