NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

50 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து விபத்துகளை குறைக்க தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர் உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து செய்துள்ளது.

குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டியவர்களே, அதிகம் சிக்கியுள்ளனர். விபத்துகளை தடுக்கும் நோக்கில், இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும், அரசு எச்சரித்துள்ளது.படுகாயம்தமிழகத்தில், 2016ம் ஆண்டில், 73 ஆயிரத்து, 431 சாலை விபத்துகள் நடந்தன; 17 ஆயிரத்து, 218 பேர் உயிரிழந்தனர். இந்தாண்டு ஜூலை வரை, 39 ஆயிரத்து, 82 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில், 10ஆயிரம் பேர் உயிரிழந்தனர்;44 ஆயிரத்து, 500 பேர்படுகாயம் அடைந்தனர்.விபத்துகளுக்கு, போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்றாததே காரணம் என,
ஆய்வில் தெரிய வந்துஉள்ளது. இதனால், சாலைவிதிகளை மீறுவோரின், ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.
முக்கியமாக, மோட்டார் வாகன சட்டம் - 1988, பிரிவு - 19 மற்றும், 1989, விதி, 21-ன்படி, அதிக வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், குடி போதையிலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் உரிமங்களை, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, 2017 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 49 ஆயிரத்து, 783 பேரின், ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், ஜூலை வரை, 9,489 உரிமங்களே ரத்து செய்யப்பட்டன.ஆகஸ்டில், சாலை விதிகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க,தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால், ஆகஸ்டில், 9,105; செப்டம்பரில், 31 ஆயிரத்து, 189 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உத்தரவுபோக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர்உரிமத்தை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றம், ஜூனில் உத்தரவிட்டது.அதன்படி, போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதனால் தான், ஆக., - செப்., மாதங்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.உரிமம் ரத்து செய்யும்முன், ஓட்டுனர்களிடம்விளக்கம் கேட்கப்படும். அதில், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம்இருந்தால், குறுகிய காலத்தில், லைசென்ஸ்
புதுப்பிக்கப்படும்.லைசென்ஸ் ரத்தால், விபத்து குறையுமா என்பதை விட, விதி மீறினால், லைசென்ஸ் ரத்தாகும் என, ஓட்டுனர்கள் புரிந்து வைத்துள்ளனர். இந்த மனமாற்றத்தால் தான், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.
உரிமம் ரத்து விபரம்
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டோரில், குடி போதை மற்றும் மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களே அதிகம்.
காரணம் லைசென்ஸ்ரத்து
அதிக வேகம் 5,836
சரக்கு வாகனங்களில் அதிக பாரம் 3,215
சரக்கு வாகனங்களில் அதிக நபர்கள் 4,646
மொபைல் போன் பயன்பாடு 16,574
போதையில் இயக்கம் 16,598
சிக்னலை தாண்டியது 2,914
வாகனங்களில் தில்லாலங்கடி
'பஸ், லாரி, வேன் உள்ளிட்ட, பொது 
போக்குவரத்து வாகனங்களில், வேகக் 
கட்டுப்பாட்டு கருவியை கட்டாயம் பொருத்த 
வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 2016 ஏப்ரலில் அறிவித்தது. 
அதன்படி, 'கனரக லாரிகள், 80 கி.மீ., வேகத்திலும், பள்ளி வாகனம், காஸ், டீசல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், 60 கி.மீ., வேகத்திற்கும் மேல் செல்லக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும், வாகனம் உரிமம் புதுப்பிப்பு சான்று மறுக்கப்படுகிறது. ஆனால், பலர், அக்கருவியை நிரந்தரமாக பொருத்தாமல், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில், ஒரு நாள் வாடகைக்கு வாங்கி, 
வாகனங்களில் பொருத்தி, சான்று பெறுகின்றனர். 
இதற்கு, ஆர்.டி.ஓ.,க்களும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, முறைப்படுத்தாவிட்டால், விபத்துகள் 
அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive