NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை

கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை:

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியலில் ஒரு பகுதியாகவோ அல்லது துணைப்பாடமாகவோ சேர்ப்பதாக செய்திதாள்களில் செய்திகள் வந்து உள்ளன.இவ்வாறு அறிவியலில் ஒரு பகுதியாக  சேர்ப்பதால் அறிவியல் ஆசிரியர்களின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடம் முழுமையாக சென்றடையாது.எனவே பி.எட் கணினி அறிவியல் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து மாணவர்களுக்கு கணினி அறிவியலை திறம்பட நடத்த பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை  அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை  பள்ளிகளில் பணி நியமனம் செய்ய டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் கல்வித்துறையில் எண்ணற்ற புரட்சிகளைச் செய்யும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களும் ஆவணம் செய்து 50000ற்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்ற வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                              நன்றி
இப்படிக்கு
ச.பாலசுப்ரமணியன்,M.SC,B.Ed,M.PHIL
செல்:8428184441
மாநில ஊடக மற்றும் செய்தி தொடர்பாளர்,
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம்,
தமிழ்நாடு.
பதிவு எண்:127/2016




3 Comments:

  1. intha goverment panathu, next government cs teacher varum

    ReplyDelete
  2. next CM very short time computer teacher appoiment

    ReplyDelete
  3. Very bad situation b.ed computer science teachers

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive