NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைத்தல் - பொருட்டு அங்கிகாரம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம்.

தமிழ் நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை - கலைத்திட்டம் - பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைத்தல் -
பொருட்டு  அங்கிகாரம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம்  அக்டோபர்  7 சனிக்கிழமை (7-10-2017)அன்று மதியம் 2மணி முதல் மாலை 5வரை சென்னையில் உள்ள மாநிலக் கல்வியியல் அராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள SIEMAT - 1 அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்  தமிழகம் முழுவதிலும் இருந்து அங்கிகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கலந்து கொண்டன. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தங்கள் கோரிக்கைகளை மனுவாகவும், வாய்மொழியும் கூறினார்கள். 
இதில் அணைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சமூகத்திற்கும் தற்போதைய காலநிலைக்கு ஏற்றார் போல் புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும் என கூறினர்.
புதிய பாடத்திட்டம் வருவதற்கு முன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.
தற்போது கொண்டுவர உள்ள புதிய பாடத்திட்டம் CBSE க்கு இணையானதாக இருக்க வேண்டும் என்றும் அப்பாடத்திட்டம் அனைத்து வகை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களும் NEET, மருத்துவ படிப்போ அல்லது பொறியியல்துறை  படிப்போ மட்டும் படிக்க போவதில்லை. கலை அறிவியல் மற்றும் பிற பலத்துறைகள் உள்ளன அத்துறை  சார்ந்த மாணவர்களுக்கும் ஏற்றார்போல் இப்புதிய பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். உதாரணம்  வேளாண்மை மாணவர்கள் வேளாண் சம்மந்தமான புதிய பாடங்களை அறிமுக படுத்துதல், வண்ண பாடங்களை இணைத்தல்,  போன்ற பல முக்கிய கருத்துக்களை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கூறினர்.

கணினி ஆசிரியர்களின் முக்கிய கருத்துக்கள் :

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதற்கும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கும் முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இல்லை என்பதே நிதர்சமான உண்மை. 

 1)கணினி பாடம் 6முதல்  10ம் வகுப்பு வரை 6-வது தனி பாடமாகவும்  அதற்க்கு பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்தினால் தான் முழுமையாக மாணவர்கள் கணினி கல்வி அறிவு பெற முடியும்.

2)கணினி பயிற்றுனர் என்பதை மாற்றி கணினி அறிவியல் ஆசிரியர்களாக  அங்கிகரிக்க வேண்டும்.

3)அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்து, அதன் மூலம் மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த வேண்டும்.

4) புதிய புதிய கணினி வேலை வாய்ப்பு பாடங்களை இணைத்து மாணவர்கள் அறிவுத்திறனை பெருக்க செய்தல்.  
இக்கூட்டத்தில் அனைத்து  கணினி ஆசிரியர்கள்   சங்கங்களும் இணைந்து  தங்கள் ஒருமித்த கோரிக்கைகளை  மனுக்களாக  கொடுத்தனர். 

கூட்டம் முடிந்த பின்னர் அனைத்து கணினி சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நன்றி.
சை.புருஷோத்தமன்.
மாநில இணை செயலாளர்.
பி.எட் கணினி பட்டதாரிகள் மற்றும் 
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நல சங்கம்  127/2016
9944041212




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive