NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"மொழி சார்ந்த இலக்கிய மன்ற நிகழ்வுகளில் நமது மாணாக்கர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க முயல வேண்டும்"

"மொழி சார்ந்த இலக்கிய மன்ற நிகழ்வுகளில் நமது மாணாக்கர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க முயல வேண்டும்" - ஆசிரியர்கள் பார்வையில் ஓர் எதிர்பார்ப்புக் கட்டுரை.

இலக்கிய மன்றத் திறன் மாணாக்கர்களிடையே மேம்பாடு அடைய
இரு விதமான பார்வையில் நம் தேடல்கள் மற்றும் செயல்பாடுகள் அமையப்பட வேண்டும்.
 
"மாணாக்கர்கள்"

@ இலக்கியம் சார்ந்த படைப்புகளை மனம் உவந்து தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

@ கல்விக் கூடங்கள் நடத்தும் இலக்கியம் சார்ந்த விழாக்கள் மற்றும் போட்டிகளில் தாமாகவே முன் வந்து முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள முற்பட வேண்டும்.

@ எப்போதும் இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மற்ற மாணாக்கர்களைக் கண்டு பயம் கொள்வதை தவிர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

@ போட்டிகள் அறிவிப்பு செய்வதற்கு முன்னரே தகுந்த இலக்கிய அறிவு அதிகம் பெற்ற ஆசிரியர்களிடம் வெற்றி பெறத் தேவையான பொதுவான இலக்கியம் சார்ந்த யுக்திகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள முற்படல் அவசியம்.

@ கல்விக் கூடங்கள் அல்லாத மற்ற இலக்கிய வட்டார கூடுகைகளில் கலந்து கொண்டு மாணாக்கர்கள் தங்கள் பங்களிப்பை ஆர்வத்துடன் தர வேண்டும்.

@ ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடம் அவர்கள் கையாண்ட முறைகளைக் கேட்டு அறிந்து, பின்னர் அதை விட  புதுமையாக படைக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

@ வெற்றி தோல்வி பற்றிய சிந்தனைகளை விட்டுவிட்டு கலந்து கொண்டு சிறப்பித்தல் கூட நன்மை பயக்கும் என்பதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

@ இலக்கியம் சார்ந்த நிறைய புத்தகங்களை வாசிக்கவும், இலக்கியவாதிகளின் நட்பு வட்டாரத்தில் நல்ல உறவினை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

@ இலக்கியப் பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள், புகைப்படங்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் உணர வேண்டும்.

##############################

*"அரசு"*



@ அதிகப்படியான இலக்கிய மன்ற நிகழ்வுகளையும், போட்டிகளையும் தொடர்ச்சியாக கல்விக் கூடங்களில் நடத்த உத்தரவு பிறப்பித்தல் வேண்டும்.

@ நடத்தப்படும் இலக்கிய மன்ற போட்டிகளுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி, முறையே செயல்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

@ இலக்கியவாதிகளை இனம் கண்டு அவர்களைக் குழுக்களாக, சுழற்சி முறையில் கல்விக் கூட மாணாக்கர்களுக்கு இலக்கியம் சார்ந்த அறிவை மெருகேற்ற திட்டம் வகுத்து அரசு செயல் படுத்த வேண்டும்.

@ வாராந்திர ஆசிரியர் கால அட்டவணையில் இலக்கிய பாடப் பிரிவிற்கென ஒரிரு வகுப்புகளை ஒதுக்கப்பட வேண்டும்.

@ இலக்கிய ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை  இலக்கிய ஆர்வம் அற்ற மாணாக்கர்களுக்கும் தந்து   அவர்களிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்க ஆசிரியர் முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும்.

@ மாணாக்கர்கள் சுயமாக சிந்தனை செய்து இலக்கியம் சார்ந்த படைப்புகளை வெளியிட போதிய கால அவகாசம் தரல் அவசியம்.

@ மேடை பயம் தீரும் அளவில் எளிய,  அதிக, தொடர்ச்சியான இலக்கிய நிகழ்வுகளில் மாணாக்கர்களுக்கு வாய்ப்புகளைத் தர வேண்டும்.

@ தொடர் தோல்விகளைச் சந்திக்கும் மாணாக்கர்களை இனம் கண்டு வெற்றிக்கான வழிகளை ஆசிரியர்கள் முறைப்படுத்த வேண்டும்.

@ கட்டுரை, பாடல், பேச்சு, கவிதை போன்ற எண்ணற்ற இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களை சந்திக்கவும், அவர்களின் படைப்புகளைப் பற்றி மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளவும் தகுந்த சூழலை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ ஏற்படுத்த வேண்டும்.

#########################
நன்றி......

ஆக்கம்:
ஆ.சந்துரு (பட்டதாரி ஆசிரியர்)
கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி,
ஒட்டர் பாளையம்,
கோவை-16.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive