NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவிகள் தற்கொலை பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள காஞ்சீபுரம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரவி கூலித்தொழிலாளி.
இவரது மகள் சங்கரி (வயது 16). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் மனிஷா (16), பனப்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்த குமார் மகள் ரேவதி (16), அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் தீபா (16).

சங்கரி உள்ளிட்ட 4 மாணவிகளும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் நேற்று முன்தினம் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளை (அதாவது நேற்று) பள்ளிக்கு வரும்போது பெற்றோரையும் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் 4 மாணவிகளும் பயந்துள்ளனர்.

 4 மாணவிகளும் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த புத்தகப்பையை பள்ளியில் வைத்த அவர்கள் பெற்றோரை அழைத்து வராததால் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்களோ என்று பயந்து பள்ளியை விட்டு வெளியே சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் 4 பேரும் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அருகே நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றின் அருகே தங்களது சைக்கிள் மற்றும் காலணிகளை வைத்து விட்டு அமர்ந்து பேசினார்கள். இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 4 பேரும் கிணற்றில் குதித்தனர். இதனால் தண்ணீரில் மூழ்கினர்.

 நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே மாணவிகள் 4 பேரின் சைக்கிள்கள் மற்றும் காலணிகள் இருப்பதை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நடந்த விபரீதம் அறியாமல் என்னமோ.. ஏதோ என்ற பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றனர். அங்கு மாணவிகளின் 4 சைக்கிள்களையும், 3 மாணவிகளின் காலணிகளையும் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்

 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக 4 மாணவிகளின் உடல்கள் மீட்ட்டனர்

 தலைமை ஆசிரியை திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.  இந்நிலையில்,  பனப்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ராமாபாய் மற்றும் வகுப்பு ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.




6 Comments:

  1. உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களிடம்என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.தலைமை ஆசிரியர்கள், ஆசிரியரிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.ஆசிரியர் மாணவர்களிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார். மாணவர்களோ,எங்களைப் படிக்கச் சொன்னால் தற்கொலை செய்து கொண்டு உங்களை மாட்டி விடுவோம் என்பார்கள்.-பாதிக்கப்பட்ட ஆசிரியர் ,ஆசிரியைகள் சார்பாக.

    ReplyDelete
  2. உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களிடம்என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.தலைமை ஆசிரியர்கள், ஆசிரியரிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.ஆசிரியர் மாணவர்களிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார். மாணவர்களோ,எங்களைப் படிக்கச் சொன்னால் தற்கொலை செய்து கொண்டு உங்களை மாட்டி விடுவோம் என்பார்கள்.-பாதிக்கப்பட்ட ஆசிரியர் ,ஆசிரியைகள் சார்பாக.

    ReplyDelete
    Replies
    1. 100% true. Blaming everything on teachers shows cheap mentality. Why did not the parent took interest in their daughter future.

      Delete
  3. If teachers don't take classes well definitely anyone can question them and warn them, but if teachers held responsible for their suicide, why should the government ask the teachers about result, let the teachers do their teaching work alone, rest let parents and other government official who can not be punished or questioned about the action they take. Why teachers are to be punished when they do their work sincerely???

    ReplyDelete
  4. மாணவிகளின் உயிரிழப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது
    16 வயது வரைபார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளின் இழப்பு என்பது எவராலும் ஈடு செய்யமுடியாதது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
    ஆனால் எங்களைப் படிக்கச் சொன்னால் தற்கொலை செய்து கொண்டு உங்களை மாட்டி விடுவோம் என்ற மனப்பான்மையை மாணவர்களிடம் உருவாக்கி மாணவர்களை நெறிபடுத்தி அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை மட்டுமே காண விரும்பி தன்னலமின்றி கற்றலையும் கற்பித்தலையும் நிகழ்த்திகொண்டுவரும் தெய்வத்திற்கு சமமான ஆசிரியர்களை தண்டிப்பது முறையா? பதற்றத்தை தணிக்கவேண்டும் என்பதற்காக தண்டிக்கும் முறையற்ற செயல்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் மனங்களிலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற உண்மை புரிந்தும் புரியாதவர்களாய்
    இன்னும் எத்தனை காலம் அடிமைகளாய் வாழும் நிலை நீடிக்க போகிறது? அஹிம்சையால் மட்டும் இந்தியா சுதந்திரம் அடையவில்ல, வெள்ளையனே வெளியேறு இல்லையேல் வெளியேற்றபடுவாய் என்ற நேதாஜியின் கர்ஜணையால் வேறு வழியின்றி கட்டாயத்தின்பேரில் அஹிம்சையாளர்களிடம் வழங்கப்பட்டது சுதந்திரம் என்ற உண்மையை எந்த சூழலிலும் திடமாக நம்பினால் மட்டுமே ஆசிரியர்களின் லட்சியபயணம் அர்பணிப்புடனும் உயிரோட்டத்துடனும் அமையும் என்று தணியும் "இந்த சுதந்திர தாகம்" vi

    ReplyDelete
  5. S.ARAVARASAN11/26/2017 3:34 pm

    its not correct to punish and blame teachers. what can we do in future? HOW CAN WE SAVE OUR LIVES? HOW CAN WE SAVE OUR FAMILIES? HOW CAN WE WORK ? HOW CAN WE CONTROL STUDENTS?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive