Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ரூ.2,000 வரையிலான டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டணத்தில் விலக்கு: மத்திய அரசு

மத்திய வணிகத் தள்ளுபடி விகித கட்டணமானது டெபிட் கார்டு மட்டும் இல்லாமல் யூபிஐ பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் கிடைக்கும் என்பது சிறப்பு.


இரண்டு வருடங்கள் சலுகை

வணிகத் தள்ளுபடி விகித பரிவர்த்தனை கட்டணம் விலக்கானது 2018 ஜனவரி 1 முதல் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வணிகத் தள்ளுபடி விகிதம்

மத்திய அரசும், ஆர்பிஐ வங்கியும் வணிகத் தள்ளுபடி விகித கட்டத்தினை இதற்கு முன்பு வணிகர்களே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையினை வணிகர்கள் ஏற்கவில்லை. தற்போது மத்திய அரசு 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் வணிகத் தள்ளுபடி விகித கட்டணத்தில் விலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்குப் பயன்

இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சிறிய அளவில் ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வணிகர்களும் பயன் அடைவார்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு வெள்ளிக்கிழமை டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் 2,000 ரூபாய் வரையிலான அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் வணிகத் தள்ளுபடி விகித கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading