NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2009 &TET ஆசிரியர்களுக்கான SSTA செய்தி!

*கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிகக் கடுமையாக இரவு பகலாக கண்தூங்காமல்
மாநில அமைப்பு எடுத்த அசுர வேகத்தின் பலனாக கடந்த வாரம் முதல் இன்றைய நாள் வரை 4 முறை நமது வழக்கை விசாரணை பட்டியலில் இடம் பெற செய்து வழக்கை இன்று மூத்த வழக்கறிஞர் அவர்களால் மிகக்கடுமையான சூழலில் கொண்டு வரப்பட்டது

*இன்று நமது தரப்பில் கடந்த மாதத்தின் ஊதியத்தை குறிப்பிட்ட சில ஒன்றியங்களில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று வரை வழங்கவில்லை,மேலும் வழங்கப்பட்ட ஒன்றியங்களிலும் 15 நாட்களுக்கு மேல் தாமதமாக தான் வழங்கப்பட்டது என்றும் அழுத்தமாக எடுத்துக்கூறப்பட்டது.*
*அரசு தரப்பில் நாங்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கிவிட்டோம் என கூறினர். அதற்கு நமது வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து ஊதியம் வழங்காததை சுட்டிக்காட்டியதோடு இந்த மாதம் புதிய ஊதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கிற மாதிரி மாத கடைசியில் எங்களுக்கும் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு மாண்புமிகு நீதியரசர் இனிவரும் காலங்களில் இதுபோல் நடந்தால் வரும் 02/01/2018 அன்றே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடருங்கள் என கூறினார்.*

*💪💪அடுத்ததாக நமது தரப்பில் ஊதிய நிர்ணய விருப்பபடிவ காலம் வரும் 10/01/2018 அன்று முடிவடைய உள்ளதை சுட்டிக்காட்டி அதை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டது, அதன் பயனாக இனி அரசு தானாக முன்வந்து நீதிமன்றத்தில் வழக்கை முடிக்கும் வரை நமக்கு காலக்கெடு விதிக்க முடியாது.நாம் அதுவரை பழைய ஊதியத்தை கால தாமதமின்றி பெற்றுக்கொள்ளலாம்.வழக்கு விரைவில் முடிந்தவுடன் இந்த காலத்திற்கான அரியர் தொகையில் ஒரு ரூபாய் கூட குறையாமல் பெற்றுவிடலாம்*

*ஆதலால் இனி ஒருவர் கூட அவசரப்பட்டு ஊதிய புதிய நிர்ணய விருப்ப படிவத்தை கொடுக்க வேண்டாம்.*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

*இனி நாம் அரசுக்கு இது போன்று அனைத்து வகையிலும் கொடுக்கும் கடும்நெருக்கடியே அரசு நமக்கு விரைவில் ஊதிய முரண்பாட்டினை தீர்க்கும்.கவலை வேண்டாம் நண்பர்களே எடுத்த காரியம் வெற்றி பெறும் வரை விடமாட்டோம்.விரைவில் இழந்த ஊதியத்தினை வென்றெடுக்கும் நீதிமன்ற ஆணையும் பெற்றிடுவோம்*
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼

*கடந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும்.*

இவண்
*ஜே.ராபர்ட்*
*2009 &TET ஊதியமீட்பு போராட்டக்குழு மாநில தலைமை




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive