Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் அதிவேக இணையச் சேவையை அளிக்கக் கூடாது என்று டிராய் எச்சரிக்கை!

குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் அதிவேக இணையச் சேவையை அளிக்கக் கூடாது என்று டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றை கண்காணித்து வரும் செயலில் ’டிராய்’ அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இணையச் சேவைகளை வழங்கும் போது ஒரு சில இணையதளங்கள் மட்டும் விரைவாக செயல்படும் வகையில் ஏற்றத் தாழ்வுகள் விதிக்கக்கூடாது. இதுதொடர்பாக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

விதிமீறல்களைக் கண்காணிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையச் சேவை வழங்குவோர், இணையதள உரிமையாளர்கள், பொதுமக்கள், நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading