Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு?

TRB தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் வேலை வழங்க முயன்றது அம்பலம்.
கடந்த செப்டம்பர் 16ம் தேதி (16.09.17) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை (TRB) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அத்தேர்வுக்கான முடிவுகளை நவம்பர் 7 ஆம் தேதி (07.11.17) வெளியிட்டது. 1058 பணியிடங்களுக்காக 2200 பேரை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்திருந்தது.
இந்நிலையில் "உயர் மதிப்பெண் பெற்றவர்கள் " எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை அறிந்து சந்தேகமடைந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மாணவர் தரப்பில்
1. வெளி மாநில மாணவர்கள் 69% இட ஒதுக்கீட்டில் தேர்வாகியிருப்பது
2. வினாத்தாள் - விடைகள் குளறுபடி
3. தேர்வு மதிப்பெண்கள் மோசடி
4. தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் அதிக அளவில் தேர்வாகியிருப்பது பாலிடெக்னிக்கில் பயிலும் தமிழ் மாணவர்களை பாதிக்கும் போன்றவை குற்றச்சாட்டுகளாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று (11.12.17) பழைய தேர்வு முடிவுகளை திரும்பப்பெற்ற ( TRB ) ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய OMR மதிப்பெண்களை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் TRB யின் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணை (CV List) யில் உள்ளவர்களின் பழைய மதிப்பெண்களை புதியதாக வெளியிடப்பட்ட மதிப்பெண்களுடன் சரிபார்த்த போது தேர்வானவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
54 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 146 மதிப்பெண்களும்
60 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 149 மதிப்பெண்களும் போலியாக போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர்.
இதே போல்
இயந்திரவியல் துறையில் 50 மேற்பட்டோரும்,
மின்னணுவியல் துறையில் 40 மேற்பட்டோரும்
கணினி அறிவியல் துறையில் 30க்கும் அதிகமானோரும்
இதர துறைகளில் கணிசமாகவும் போலி மதிப்பெண்களை போட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக கடினப்பட்டு படித்து வேலை கிடைக்கும் எதிர்பார்ப்பில் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.




9 Comments:

  1. Super trb yenga pavam ungala ...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Trb hurt true meritorial students

    ReplyDelete
  4. TRP பணம் பெற்று மார்க்கு போட்டவனை இரு கைகளை வெட்டினால் இதுபோல் இனி நடக்காது லஞசம் கொடுத்தவனை இனி வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்க வேண்டும்

    ReplyDelete
  5. It is becoming common issue in India nowadays. This may get stopped when we stop electing gundas and rowdies as our rulers.

    ReplyDelete
  6. TNSET 2017 AMOUNT PLAYED.

    ReplyDelete
  7. If the meritorial candidates are rejected like this false activities then how can we say we are the followers of M.K.Gandhiji

    ReplyDelete
  8. அண்டை மாநில சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, வெளி மாநிலத்தவர்க்கு வேலை இல்லை என்று, தமிழகத்தில் என்ன பன்றங்க, ஓட்டுக்கு தமிழ்நாட்டு மக்களுகிட்ட கையேந்திவிட்டு , மற்ற மாநில காரனுக்கு வேலா தராணுங்களே , தமிழ்நாட்டுல படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கங்கன்னு அரசியல் வாதிகளுக்கு தெரியாதா, அதிகாரிகளுக்கு தெரியாதா?

    ReplyDelete
  9. தமிழ்நாட்டுல இருக்குற மத்திய அரசு அழுவலகங்கள்ல தமிழ் நாட்டுகரனுக்கு திறமை இருந்தாலும் வேலை தர மாட்டேங்குறான் ஆனா தமிழ்நாட்டு வேலையில மட்டும் கண்ட நல்லாம் வந்து வேலை வங்கிக்கிது, இது என்ன நாடா, இல்ல ....சீ..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive