NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசின் சேவைகளை வழங்குவதற்கான புதிய‘மின்னாளுமை கொள்கை 2017’: முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்

அரசுத்துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இருப்பிடம் அருகில்,
அரசின் சேவைகளை வழங்குவதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் தெரிவிக்கும்‘ மின்னாளுமைக் கொள்கை-2017’முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய இந்த மின்னாளுமைக் கொள்கைகளை முதல்வர் வெளியிட, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.இந்த கொள்கையானது, 2023-ம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையம் வாயிலாகவழங்கல், பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசிசெயலிகள் மூலம் அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற வழிவகை செய்தல், அரசின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
மேலும், அரசுத்துறைகளின் மின்னாளுமை சிறப்பு முற்சிகளுக்காக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை சீரான முறையில் பயன்படுத்த வழிகாட்டுதல்களையும் இந்த கொள்கை வழங்கும். இதன் மூலம் அரசுத்துறைகள்,பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அரசின் சேவைகள் தங்கு தடையின்றி மின்னணு முறையில் வழங்க முடியும்.
மேலும், மத்திய அரசு நிர்ணயித்துள்ள தர நிலைகள் மற்றும் கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டுள்ள இம்மின்னாளுமைக் கொள்கை, மின்னாளுமையில் மீத்தரவுகளுக்கான (metadata) தரநிலைகள், திறந்த நிலை மென் பொருட்கள் (Open Source Software) பயன்பாடு மற்றும் தமிழ்க்கணினிப் பயன்பாட்டு தரநிலைகள், கணினி-மென்பொருள்- தரவு ஆகியவற்றக்கு இடையிலான பொதுவான கட்டமைப்பு, தர நிலைகள், பெயர்வுத்திறன் (Portability) இயங்குதன்மை ஆகியவற்றை உறுதி செய்யும்.மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் அரசுத்துறைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். கணினிப் பழுதுகளுக்கான செலவினமும் குறையும்.
மேலும், அரசுத்துறைகள் தங்கள் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில், முதல்கட்டமாக 0.5 சதவீதத்தைமின்னாளுமைத் திட்டங்களுக்காக ஒதுக்கவும், பின் படிப்படியாக அதை 5 ஆண்டுகளுக்குள் 3 சதவீதமாக அதிகரிக்கவும் இக்கொள்கை வழிவகை செய்கிறது.இதற்கான நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் (பொறுப்பு) கே.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் செயலர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive