NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தாம்பரம்–நெல்லை இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பொங்கல் திருநாள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தாம்பரம்–நெல்லை இடையே கீழ்க்கண்ட சிறப்பு மற்றும் முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
* நெல்லை–தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06064) நெல்லையில் இருந்து வருகிற 11–ந்தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* தாம்பரம்–நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்: 06015), வரும் 14–ந்தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* தாம்பரம்–நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (வண்டி எண்:82607), வருகிற 12–ந்தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லை–தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் (82610), வருகிற 16–ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* தாம்பரம்–நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (வண்டி எண்:82613), வருகிற 20–ந்தேதி இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லை–தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் (82614), வருகிற 22–ந்தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
* தாம்பரம்–நெல்லை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06017), வருகிற 12–ந்தேதி இரவு 9.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* நெல்லை–தாம்பரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06018), வருகிற 16–ந்தேதி காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive