NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'புதிய பாடத்திட்டங்களுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில், புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளோம். இதை, வரைபடங்கள் மூலம் வெளியிட்ட போது, கல்வியாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


கிருஷ்ணகிரியில் நடந்த, தனியார் பள்ளி வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ள, பட்டம் படித்த மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் பயன் பெற, 75 ஆயிரம் மாணவ - மாணவியர்ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளோம். இதை, வரைபடங்கள் மூலம் வெளியிட்ட போது, கல்வியாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தமிழகத்தில் உள்ள நுாலகங்கள், படிப்படியாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளிகளில் பணிபுரியும், பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய முடியாது. பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி அவர்கள் வசிக்கும், 10 கி.மீ., துாரமுள்ள பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து, கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம். இது குறித்த முடிவு, விரைவில்அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.




1 Comments:

  1. Everything is fine with new syllabus but present XI is suffering very much without blue print and studying a vast syllabus of Wht last year children did for more marks with blue print.
    The performance is very bad

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive