NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SBI வங்கி ஊழியர் எழுத்துத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குமாஸ்தா (கிளார்க்) தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 8,301 காலி பணியிடங்கள் உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பத்தை www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்-லைன் மூலம் வருகிற (பிப்ரவரி) 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழு தகவல்களையும் மேலே கொடுக்கப்பட்டு உள்ள இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1-1-2018-ந் தேதியின் படி 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுகள் பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என இரு நிலைகளில் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள்

இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.

இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

தங்கும் வசதி

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாள் (14-ந்தேதி) நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500-க்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் -628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 7.2.2018-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive