NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்

மும்பை, : இந்­தி­யா­வில், படிக்­கா­தோரை விட படித்த இளைஞர்­கள் தான், அதி­கள­வில் வேலை­யின்றி உள்ள­தாக, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.இது குறித்து, சமூ­கம் மற்­றும் பொரு­ளா­தார மாற்ற மைய துணை பேராசி­ரி­யர், இந்­தி­ர­ஜித் பைராக்­கியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:
படிக்­காத இளை­ஞர்­களை விட, படித்த இளைஞர்­க­ளி­டையே தான், வேலை­யின்மை அதி­க­மாக உள்­ளது.இது, அவர்­கள் கற்ற கல்­விக்­கேற்ப உயர்ந்து வரு­கிறது.எனி­னும், அத்­த­கை­யோ­ருக்கு ஏற்ற ஊதி­யத்­தில் வேலை கிடைக்­கா­மல் உள்­ள­தை­யும் மறுப்­ப­தற்கு இல்லை.வழக்­க­மான பணி வாய்ப்­பு­கள், ஒரு வரை­ய­றைக்கு உட்­பட்ட அள­விற்கே உள்ள போதி­லும், படித்த இளை­ஞர்­கள் அவற்றையே நாடி, பிற பணி­களை தவிர்க்­கின்­றனர்.இந்த போக்கு, வளர்ச்சி அடைந்த மாநி­லங்­களில் அதி­க­மாக உள்­ளது. அங்­குள்ள வேலை­வாய்ப்­பு­களை விட, படித்­தோர் அதி­க­மாக உள்­ள­தால், போட்டி கார­ண­மாக, வேலை­யில்லா திண்­டாட்­ட­மும் பெருகி உள்­ளது.பெரிய குடும்­பங்­களில், படித்த வேலை­யற்­றோர் அதி­கம் உள்­ள­னர். குடும்ப பாரம் இல்­லா­த­தால், அவர்­கள் நல்ல வேலையை எதிர்­பார்த்து, கிடைக்­கும் வேலை­யில் அம­ரா­மல் காலம் கடத்­து­கின்­ற­னர்.நடுத்­தர வய­தி­னரை விட, படித்த மற்­றும் படிக்­காத இளை­ஞர்­க­ளி­டையே, வேலை­யில்லா திண்­டாட்­டம் அதி­க­மாக உள்­ளது.தொழிற்­ப­யிற்சி பெற்ற, படித்த மற்­றும் படிக்­கா­தோ­ருக்கு, அமைப்பு சார்ந்த அல்­லது சாராத துறை­களில் வேலை­வாய்ப்பு கிடைக்­கிறது.இளை­ஞர்­க­ளி­டம், தொழில்­நுட்­பம் மற்­றும் தொழிற்­ப­யிற்சி திறனை அதி­க­ரிக்க, தீவி­ர­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அவ்­வாறு செய்­தால், படித்­தோர் மற்­றும் படிக்­கா­தோ­ரின் வேலை­யில்லா திண்­டாட்­டத்தை குறைக்க முடி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive