Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 17.2.2018

மேஷம் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

ரிஷபம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே  

மிதுனம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு 

கடகம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்


சிம்மம் பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்  

கன்னி குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் 

துலாம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்  

விருச்சிகம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு 

தனுசு தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்  

மகரம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் 

கும்பம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மீனம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading