NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 24.2.2018

☸மேஷம் :-
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள்.
நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமற்ற சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அசுவினி : புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
பரணி : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.
•┈┈•❀❀•┈┈•
☸ரிஷபம் :-
புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களின் திறமைகள் வெளிப்படுவதற்கு சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀❀•┈┈•
☸மிதுனம் :-
அந்நியர்களிடம் பேசும்போது கவனத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். பயணங்களால் இலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிடம் : பேச்சில் கவனம் தேவை.
திருவாதிரை : கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀❀•┈┈•
☸கடகம் :-
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். புத்திரர்களால் சுப செய்திகள் உண்டாகும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : கல்வியில் மேன்மை உண்டாகும்.
பூசம் : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀❀•┈┈•
☸சிம்மம் :-
விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் சரியாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். இன்று உங்களுக்கு சிறப்பான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : போட்டியில் வெற்றி கிடைக்கும்.
பூரம் : பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀❀•┈┈•
☸கன்னி :-
விவாதங்களில் வெற்றி கிடைக்கும். சமூக சேவை செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச் சேர்க்கை ஏற்படும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
சித்திரை : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀❀•┈┈•
☸துலாம் :-
வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பண சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் அலைச்சல்களால் சுப செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : முயற்சியால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : பண சிக்கல்கள் நீங்கும்.
விசாகம் : சுப செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀❀•┈┈•
☸விருச்சகம் :-
அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : உபதேசங்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀❀•┈┈•
☸தனுசு :-
அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் தேக்கநிலை உண்டாகும். பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : சாதகமான சூழல் அமையும்.
பூராடம் : நிதானம் தேவை.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀❀•┈┈•
☸மகரம் :-
மனதில் காதல் எண்ணங்கள் தோன்றும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்பு குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : நற்பேறு உண்டாகும்.
திருவோணம் : மனக்கசப்பு குறையும்.
அவிட்டம் : பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.
•┈┈•❀❀•┈┈•
☸கும்பம் :-
திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சதயம் : பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்
•┈┈•❀❀•┈┈•
மீனம் :-
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வரும். பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive