NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:-இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
போதிய திட்டமிடுதல், அனுபவம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்வு மிகுந்த குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கோடை விடுமுறையில் மே 19-ஆம் தேதி வரை திருத்துவதற்கான அட்டவணை கல்வித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர்களின் கோடை விடுமுறை பாதிக்கப்படும். மேலும் கடும் வெயில் காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. எனவே, தமிழக தேர்வுத் துறை மொழிப்பாட ஆசிரியர்களை உடனடியாக தேர்வுப் பணியிலிருந்து விடுவித்து உடனடியாக பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடையும். 
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்காவிட்டால் வரும் மே 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பி.மனோகரன், பொருளாளர் எம்.ஜம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்

9 Comments:

  1. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை. நாம்க்கல் மாவட்டத்தில் மட்டும் 396 பேர் 11ஆம் வகுப்புத் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 6000 மானவர்களாவது தேர்வு எழுதாமல் இருப்பார்கள்.அவசர கதியில் அறிவித்து, மாணவர்கள் தேர்வு நடைபெறாது என்று அலட்சியமாக
    இரு ந்துள்ளார்கள். ஆசிரியர்களுக்கும் இது கூடுதல் சுமை. 12 ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? 11ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? முதுகலையில் 2500 காலிப் பணியிடங்கள் உள்ளன.அ ந்த வகுப்பையும் கவனிக்க வேண்டும்.அரசின் தவறான முடிவு.வரும் காலங்களில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை. நாம்க்கல் மாவட்டத்தில் மட்டும் 396 பேர் 11ஆம் வகுப்புத் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 6000 மானவர்களாவது தேர்வு எழுதாமல் இருப்பார்கள்.அவசர கதியில் அறிவித்து, மாணவர்கள் தேர்வு நடைபெறாது என்று அலட்சியமாக
    இரு ந்துள்ளார்கள். ஆசிரியர்களுக்கும் இது கூடுதல் சுமை. 12 ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? 11ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? முதுகலையில் 2500 காலிப் பணியிடங்கள் உள்ளன.அ ந்த வகுப்பையும் கவனிக்க வேண்டும்.அரசின் தவறான முடிவு.வரும் காலங்களில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை. நாம்க்கல் மாவட்டத்தில் மட்டும் 396 பேர் 11ஆம் வகுப்புத் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் கிட்டத்தட்ட 6000 மானவர்களாவது தேர்வு எழுதாமல் இருப்பார்கள்.அவசர கதியில் அறிவித்து, மாணவர்கள் தேர்வு நடைபெறாது என்று அலட்சியமாக
    இரு ந்துள்ளார்கள். ஆசிரியர்களுக்கும் இது கூடுதல் சுமை. 12 ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? 11ஆம் வகுப்பைக் கவனிப்பார்களா? முதுகலையில் 2500 காலிப் பணியிடங்கள் உள்ளன.அ ந்த வகுப்பையும் கவனிக்க வேண்டும்.அரசின் தவறான முடிவு.வரும் காலங்களில் 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. palli kalvi thurai itha marukanum.....ivanga paper correction panna koodathu....11th pasanga escape:)

    ReplyDelete
  5. palli kalvi thurai itha marukanum.....ivanga paper correction panna koodathu....11th pasanga escape:)

    ReplyDelete
  6. Pls exam cancel pannunga😞😞😞😞😞

    ReplyDelete
  7. 11th std public question papers are very tuff. If you considered this our future will be spoil. So please please don't considered this .please please.

    ReplyDelete
  8. 11th std question papees are very tuff.if you consider this our future will be spoil . So please don't consider this.please please.

    ReplyDelete
  9. 11th paper correction pana kodadhu. Please

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive