NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 8 மாணவர்கள் பிடிபட்டனர்

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நான்கு மாவட்டங்களில் 8 மாணவர்கள் பிடிபட்டனர். 
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. கடந்த 2016, 2017-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் இடம் பெற்ற 10-க்கும் மேற்பட்ட கேள்விகள் இந்த ஆண்டு வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்தன. அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. இலக்கணப் பகுதியும் மிகவும் எளிமையாகவே இருந்தது என்றனர். 
மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மொத்தம் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பிடிபட்டனர். மதுரையில் ஒரு பள்ளி மாணவர், ஒரு தனித்தேர்வர்; கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளி மாணவர்; புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் இருவர்; பெரம்பலூரில் 3 பள்ளி மாணவர்கள் தேர்வு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 
சிபிஎஸ்இ மாணவர்கள்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) சார்பில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. 
தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வை 1,016 பள்ளிகளைச் சேர்ந்த 71ஆயிரத்து 442 மாணவ-மாணவிகள் 510 மையங்களில் எழுதினர். முதல் தேர்வான ஆங்கில வினாத்தாள் எளிமையாக இருந்தததாக மாணவர்கள் தெரிவித்தனர். 
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive