NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மிகவும் ஆபத்தான 50 நகரங்கள்!

உலகில் கொலை, கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடக்கும் 50 நகரங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நகரங்களில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடத்தில் இருக்கிறது.

உலகின் போதை மருந்துக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவதால் மெக்சிகோவில் உள்ள லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. இந்நகரில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதால், கடத்தல் கும்பலின் மோதல்கள் தினமும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் வெனிசுலாவின் கராகஸ் நகரம் உள்ளது. இதையடுத்து, மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ மூன்றாவது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் நான்காவது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இவை தவிர ஆறாவது இடத்தில் லாபாஷ் (மெக்சிகோ), ஏழாவது இடத்தில் போர்டாலிஷா (பிரேசில்), எட்டாவது இடத்தில் விக்டோரியா (மெக்சிகோ), ஒன்பதாவது இடத்தில் குயானா (பிரேசில்), பத்தாவது இடத்தில் பிலீமும் (பிரேசில்) உள்ளது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரம், மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் 13ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்நகரத்தில் சுமார் 205 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டில் (2017) அதிக குற்றச்செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால், ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive