NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இதயம் காக்கும் உணவுகள்!!!

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும் பழக்கம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.





* அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உண்ணக் கூடாது.

* கீரை வகைகளை ஒதுக்கினால் இதயத்தின் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அனைத்து வகையான கீரைகளிலும் அடர் பச்சை நிற இலைகளை கொண்ட காய்கறிகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதய நலனுக்கு அவசியமானது.

* பார்ப்பதற்கு அழகாகவும், ஆடம்பரமாகவும் தெரிகிறது என்பதற்காக எண்ணெய் ஒட்டாத சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது இதய நோய்க்கு வழி வகுத்துவிடும். அந்த பாத்திரங்களில் உள்ள டெப்லான் பூச்சு மற்றும் செயற்கை வண்ணங்கள் சமைக்கும் போது உணவுடன் கலந்து நரம்பு செல்களை பாதிப்படையச் செய்துவிடும்.

* புகைப்பிடிக்கும் பழக்கம் இதயத்திற்கு கெடுதலை உண்டாக்கும். இது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

* உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது ரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் கடுமையான மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.

* பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதில் சோடியம் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகளவில் கலந்திருக்கும். இத்தகைய இறைச்சியை உண்பது இதய நோய், புற்று நோய் ஏற்பட வழிவகுத்துவிடும்.

* எண்ணெய்யில் வெகுநேரம் பொரிக்கப்பட்ட உணவுகளை உண்பது உடலில் கெட்டக் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிவிடும். அது நல்ல கொழுப்பினையும் அழித்துவிடும்.

* பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட சூடான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். டப்பாக்களின் உள் புறம் பூசப்பட்டிருக்கும் பிஸ்பெனோல்-ஏ என்னும் ரசாயனம் உணவுடன் கலந்து இதயம் சார்ந்த நோய்களுக்கும், புற்று நோய்க்கும் வழிவகுக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive