NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களின், 'ஆன்லைன்' பதிவுக்கு உதவி செய்ய, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல், நாடுமுழுவதும் நடக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க, பிப்., 9ல், ஆன்லைன் பதிவுகள் துவங்கின.தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவிப்பின்படி, வரும், 9ம் தேதி, நள்ளிரவு, 11:30 மணியுடன், ஆன்லைனில் பதிவுக்கான வசதி நிறுத்தப்படும். தேர்வுக்கான கட்டணத்தை, வரும், 10ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்குள், ஆன்லைனில் செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்கள் பெற்றோர் உதவியுடன், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில், நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும், மாணவர்களில், பெரும்பாலானோர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை.அவர்கள் உரிய அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க, பயிற்சி அளிக்கும் மையமும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் உதவ வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.




1 Comments:

  1. In most of the schools the teachers are not taking interest regarding this matter. Even they don't give any counseling in school.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive