NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு: ஆயிரம் பேர் கடும் அவதி

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளதால்,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் விரிவுரையாளர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி உள்ளனர். 
தமிழகத்தில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 3,250 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 1,000 பேர் பெண்கள். இவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உபரி ஆசிரியர்களாக கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் நியமிக்கப்படுகின்றனர்.
10 ஆண்டுகளுக்கும் மேல், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு புதிய வருகைப்பதிவேடு உருவாக்கி, அந்த விதியை அரசே மீறுகிறது. பல ஆண்டுகள் பணி செய்த கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிக பணியாளர்களாகவே அரசு வைத்துள்ளது. இதனால், ஒவ்வொரு பெண் கவுரவ விரிவுரையாளரும் மகப்பேறு காலத்தில் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்க வேண்டிய சூழல் உள்ளது.
குழந்தை பிறந்த பின்னர், விடுமுறை இல்லாத நிலையில் பாடம் நடத்துவதோடு, குழந்தைக்கு உணவளிக்க வேண்டியது என இரு வேலைகளுக்கும் மாறிமாறி அவர்கள் அலைந்து வருகின்றனர்.
இது அவர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லை என்பது அரசின் கொள்கை முடிவு என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலாவது, தமிழக அரசு பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





1 Comments:

  1. What about private college women staffs. Compare with government college staff they are suffering lot of problems like college timing and salary.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive