NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 10.3.2018

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஊதா,ரோஸ்

ரிஷபம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே  

மிதுனம் உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு 

கடகம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்

 சிம்மம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்  

கன்னி எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்  

துலாம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்

விருச்சிகம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு  

தனுசு ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை தாழ்த்துப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன் 

மகரம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும். அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்  
கும்பம் எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்  

மீனம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive