Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்?

எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி,

சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.


நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க....

சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF - Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 spf யூஸ் பண்ணுங்க

முகத்துக்கு மட்டும் இல்லைங்க வெயில்படும் எல்லா இடங்களையும்(கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் அப்ளை செய்யுங்க.

சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் நீங்க வெளியில போகணும்.

என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்க பாருங்க. தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading