NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகள் காசோலைக்கு பணம் - அவதிக்குள்ளாகும்தலைமை ஆசிரியர்கள்

கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகளை ஊக்குவித்து அவர்கள் கல்வியைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தலா ரூ. 500, 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ. 1,000, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 என கல்வி உதவித் தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து மாநில அரசின் கல்வித் துறை மூலம் மாணவிகளுக்கு வழங்குகிறது. இத் தொகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் காசோலையாக சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் காசோலை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த காசோலையை பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் பணமாக்கிக் கொள்ளும் வசதி உள்ளது.அதன்படி, சில வங்கிக் கிளைகளில் தலைமை ஆசிரியர்களின் அடையாளச் சான்றை சரிபார்த்துவிட்டு காசோலைக்கான பணத்தைதலைமை ஆசிரியரிடம் வங்கி அதிகாரிகள் வழங்குகின்றனர்.

சில வங்கிகளில் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயருடன் கூடிய தலைமை ஆசிரியர் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால்அக்கணக்கில் காசோலையை வரவு வைத்த பிறகு, பணம் எடுக்க அனுமதிக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பள்ளிப் பெயருடன் கூடிய தலைமை ஆசிரியர் பெயரில் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.வங்கிக் கணக்கு இல்லாத பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு காசோலைகளை வழங்கும் பட்சத்தில், அந்த காசோலையை பணமாக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வங்கி அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்பதே இல்லை. காசோலைக்கு பணம் வழங்கும் வங்கிக் கிளைகளின் மேலாளர்களிடம் விசாரித்துவிட்டு பணம் வழங்கலாமே என்று கேட்டால் அதுமாதிரி ஏதும் செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதனால் தலைமை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.பாரத ஸ்டேட் வங்கியின் சில கிளைகளில் காசோலையை பணமாக்க வழிமுறை உள்ளது.அதே வங்கியின் சில கிளைகளில் காசோலையைப் பணமாக்க வழிமுறை இல்லையெனக் கூறி திருப்பி அனுப்புவது வேடிக்கையாக உள்ளது.இவ்வாறான நிலைக்கு, வங்கியில் கணக்கு இல்லாத பெயருக்கு பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் காசோலை வழங்குவதுதான் காரணமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் அரசுக் கணக்கிலிருந்து நேரடியாக இசிஎஸ் முறையில் மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் கல்வி உதவித் தொகையை வரவு வைக்கக் கூடிய நிலையில், வங்கிக் கணக்கு இல்லாத பெயருக்கு காசோலை வழங்குவது மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

சில வங்கிகள் காசோலைக்கு பணம் வழங்கக் கூடிய சூழ்நிலையில், சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்வி உதவித் தொகையை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் செலுத்தி வரவு வைக்காமல், மாணவிகளின்பெற்றோரை அழைத்து பணமாகவே நேரடியாக வழங்கிவிடுவதாகவும்புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ரொக்கமாக வழங்கப்படும்போது முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், பள்ளித் தலைமைஆசிரியர்களை மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் உள்ளாக்காமல் அரசுக் கணக்கிலிருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் இசிஎஸ் முறையில் செலுத்தி, வரவு வைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.வங்கிக் கணக்கு இல்லாத பெயரில்,சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு காசோலைகளைவழங்கும் பட்சத்தில், அந்த காசோலையை பணமாக்கபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வங்கி அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது.ஆனால், வங்கி அதிகாரிகள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்பதே இல்லை.

காசோலைக்கு பணம் வழங்கும் வங்கிக் கிளைகளின் மேலாளர்களிடம் விசாரித்துவிட்டு பணம் வழங்கலாமே என்று கேட்டால் அதுமாதிரி ஏதும் செய்ய  முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள்மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.




1 Comments:

  1. நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive