NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநரைக்கு உருளை!

இரவு நேரத்திலும் அயராது பணிபுரியும் ஐடி நிறுவன இளைஞர்களும், தூக்கமின்றி தவிக்கும் பலரும் சொல்லக்கூடிய காரணம் மன அழுத்தம்.
அதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுவது நாம் அறிந்ததே.



அழகிற்காக டை அடித்துக்கொள்வதும் நேரடியாக கொடுமையான ரசாயனங்களை மயிர்க்கால்கள் மூலம் உள்ளுக்குள் செலுத்திக்கொண்டிருக்கிறோம். சரி, அப்படியென்றால் இள நரை தவிர்க்க எளிய வழி உண்டா ப்ரியா எனக்கேட்டால், நிச்சயம் உண்டு என்றுதான் சொல்வேன்.

முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு: நீங்கள் தயாரித்துள்ள உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது.

இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடிகளில் நல்ல மாற்றம் வருவதை காணலாம்.

முடிகளில் மாற்றம் வந்தால் மட்டும் போதுமா, முகத்திலும் நல்ல மாற்றங்களும் பொலிவும் அழகும் வேண்டுமல்லவா..

எங்க்கெங்கோ அலைய வேண்டாம். விவசாயிக்கு குரல்கொடுப்போம், விவசாயம் காப்போம் என்றெல்லாம் நாம் அனுதினம் காண்கிறோம். அந்த விவசாயியே நமது அழகிற்காகவும் உதவுகிறார்கள் தெரியுமா.. ஆம் தோழிகளே.. அரிசியைக்கொண்டு அழகான ரம்யமான பொலிவான முகத்தை பெற்றிடலாம்.

ஒரு ஸ்பூன் அரிசியும் ஒரு ஸ்பூன் கசகசாவும் ஊறவைத்து பால் கலந்து நன்கு அரைத்து முகம் மற்றும் கழுத்து கை கால் பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கழுவுங்கள். முகம் ப்ளீச் செய்தது போல் இருக்கும்.

பச்சிரிசி, கஸ்தூரி மஞ்சள், 3 பாதாம் பருப்பு ஆகியவற்றை அரைத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுங்கள். முகம் பளிச்சென பளபளக்கும்.

தலைக்கு சீயக்காய் தேய்க்கும்போது, அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரில் கலந்து தேய்த்தால் கூந்தல் பளபளக்கும்.

இப்படி அரிசி மற்றும் அரிசி வடித்த கஞ்சியை வைத்து வயிற்றை மட்டுமல்ல நம்முடைய சரும அழகையும் நிறைவாக்கிக் கொள்ள முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive