NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை- - - பெங்களூரு இடையே வேலூர் வழியாக விமான சேவை

 ''சென்னை - பெங்களூரு இடையே,வேலுார் வழியாக, விமான சேவை அளிக்க, ஆந்திராவைச் சேர்ந்த, 'டர்போ ஏவியேஷன்' நிறுவனம் முன்வந்துள்ளது,'' என, ேவலுார் விமான நிலைய அதிகாரி மாயப்பன்சாமி தெரிவித்தார்.
வேலுார் அடுத்த அப்துல்லாபுரத்தில், 50 ஏக்கர் பரப்பளவில், சிவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின், 'உதான்' திட்டத்தின் கீழ், சிறு விமான நிலையம் தொடங்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.முதற்கட்டமாக இங்குஇருந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு, விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, தமிழக அரசுக்கு சொந்த மான, 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட உள்ளது.
அறிவுரை : இந்நிலையில், பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடந்தன. இதற்கிடையே, சிவில் விமான போக்குவரத்து சென்னை மண்டல நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார், சமீபத்தில் ேவலுார் விமான நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான அறிவுரைகளை வழங்கினார்.இதுதொடர்பாக,வேலுார் விமான நிலைய அதிகாரி மாரியப்பன்சாமி கூறியதாவது: இந்த பகுதியில் விமானம் இறங்குவதற்கு, தென்னை மற்றும் தேக்கு மரங்கள் தடையாக உள்ளன. அவற்றை உடனடியாக அகற்றவும், மொபைல் போன் டவரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, விமான ஓடு தளம், 730 மீட்டராக இருக்கிறது. அது, 1,200 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. 
எதிர்பார்ப்பு : விமான நிலையத்தில் மழை நீர் தேங்காத வகையில், விமான ஓடுதளத்தின் உயரத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை- - பெங்களூரு இடையே வேலுார் வழியாக, 19 பேர் பயணம் செய்யக்கூடிய விமான சேவை அளிக்க, ஐதராபாதைச் சேர்ந்த டர்போ ஏவியேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது. வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், விமான போக்குவரத்து தொடங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive