NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,300 பள்ளிகளை இழுத்து மூடும் அரசு 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிக்கல்

திண்டுக்கல்:''பணி நிரவல் மூலம் 1,300 பள்ளிகளை மூடி 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

நிர்வாக சீர்திருத்தம் என தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, ஆங்கில வழி கல்வித்துறைகளை ஒருங்கிணைந்துள்ளனர். ஒரே அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பதால் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, துறைகள் இணைப்பை கைவிட வேண்டும். காமராஜர் முதல் ஜெயலலிதா வரை இருந்த முதல்வர்கள் ஆண்டுதோறும் புதுப்புது பள்ளிகளை திறந்தனர். முதல்முறையாக இப்போது 1,300 பள்ளிகளை அரசு மூடுகிறது. கல்வி அமைச்சரோ, 'பள்ளிகளை மூட வில்லை. இணைப்பு மையமாக செயல்படும்' என்கிறார்.
15,000 பணியிடம் காலி
பணி நிரவலால் பள்ளிகள் மூடப்படும். அங்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கிராம மக்களிடம் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். 'புதிய பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஓடி வருவர்' என்கிறார் கல்வி அமைச்சர். மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் போது ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும். பணிநிரவலால் இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,000 பேர் குறைக்கப்பட உள்ளனர். ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும். பணிநிரவலை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.




3 Comments:

  1. ஓடிப்போனவர்கள் பேசத்தகுதி அற்றவர்கள்

    ReplyDelete
  2. இது சரியான முடிவுதான். கிராமத்தின் கல்வி நலனைன முன்னிட்டு கிராமத்திற்கு தக்க முறையில் சமயோசிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    01.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் வட்டம் காயாமொழியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இருபாலாா் படிக்கும் இப்பள்ளியில் இடம் கட்டடம் என்று எல்லா வசதியும் சிறப்பாக உள்ளது.மேலும் 2000 பேர்கள் சோ்ந்தாலும் போதிய வசதிகள் செய்ய நிலம் உண்டு.550 போ்கள் படிக்கின்றானா்.
    தேரிகுடியிருப்பு என்ற கிராமம் காயாமொழியில் இருந்து சரியாக முக்கால் கீமி தூரத்தில் உள்ளது.அந்த ஊரில் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மாணவா் வருகை உள்ளது. நன்கு யோசித்துப் பாருங்கள் தேரிகுடியிருப்பு கிராமத்திற்கு அரசு உயா்நிலைப்பள்ளி தேவையா ?உண்மையான கல்வித் தேவையை கருத்தில் கொள்ளாது வீம்புக்கு பள்ளி துவங்கி அரசு மானியம் வீணடிக்கப்படுகின்றது.தேரிகுடியிருப்பு உயா்நிலைப்பள்ளியை ஆரம்பப்பள்ளியாக குறைத்துவிட்டு அரசு பணியிடங்களை மிச்சப்படுத்தலாம். 6 படிக்கும் மாணவ மாணவிகள் முக்கால் கிமீ நடக்க முடியும்.நடக்கட்டும்.நடப்பது நல்லது.

    ReplyDelete
  3. துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம்
    ஒரு சிறு கிராமம் சுண்டங்கோட்டை.இங்கு அரசு உயா்நிலைப்பள்ளி,அரசு ஆரம்பப்பள்ளி றிடிறிஏ ஆரம்பப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் உள்ளது.உயா்நிலைப்பள்ளியில் 200 மாணவ மாணவியருக்கும் குறைந்த அளவில் படிக்கின்றனா். அரசு ஆரம்பப்ள்ளியில் 50 பேர்கள் படிக்கின்றனா். கிறிஸ்தவ சபையாா் நடத்தும் பள்ளியில் 6 போ்கள் படிக்கின்றார்கள்.
    சுண்டங்கோட்டை உயா்நிலைப்பள்ளிக்கு சரியாக 150 மீட்டா் தூரத்தில் பள்ளக்குறிச்சி என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கு தூய இருதய நடுநிலைப்பள்ளி என்ற தனியாா் நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது.இங்கு 50 மாணவ மாணவியா்கள் படிக்கின்றா். இந்த கிராமத்திற்கு நடுநிலைப்பள்ளி தேவையா ? றிடிறிஏ ஆரம்பப்பள்ளி தேவையா ? இரண்டையும் ரமூடிவிட்டு அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளி இரண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும். வீண் பண விரயம் தவிா்க்கலாம். பணியிடங்கள் நிரவல் செய்யப்படவேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive