NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் 3வது நாளாக நீடிக்கிறது: 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரசு அழைத்து பேச மறுப்பதால் சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாக நீடிக்கிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழிலக வளாகத்தில் கடந்த 11ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுப்பதால் நேற்று 2வது நாளாக எழிலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர்.
முன்னதாக நேற்று மாலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 2 பேர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றனர்.
 அரசின் அலட்சியத்தால் இன்றும் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது. எனவே மேலும் பலர் மயங்கி விழும் சூழ்நிலை நிலவுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

 சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive