NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு -தமிழக மாணவி 5-ஆம் இடம்


புதுவை ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை
வெளியாகின. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 மருத்துவ இடங்களும், அதன் காரைக்கால் கிளையில் 50 இடங்களும் என மொத்தம் 200 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப ஜிப்மர் சார்பில் தனியாக அகில இந்திய அளவில் இணையதளம் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2018 - 19 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்
இந்தத் தேர்வை நாடு முழுவது 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகின. தேர்வு முடிவுகளை ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.inஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது. வகுப்புகள் ஜூலை 4-ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. அகில இந்திய அளவில் அன்கதல அனிருத பாபு (99.9987) முதலிடமும், அகில் தம்பி (99.9986) இரண்டாமிடமும், ப்ரேராக் திரிபாதி (99.9975) மூன்றாமிடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் (99.9973) 4-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
தமிழக மாணவி 5-ஆம் இடம்: தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா (99.9963) 5 -ஆம் இடம் பிடித்துள்ளார். இவர், நீட் தேர்வில் தேசிய அளவில் 12 -வது இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது





1 Comments:

  1. வாழ்த்துக்கள். இவருக்கு கிடைத்த தரமான கல்வி மற்றும் தனி வகுப்பு பயிற்சி மற்றவா்களுக்கும் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். செய்யுமா தமிழக அரசு.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive