NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்...படிங்க..

வ.உ.சி. அவர்கள் வாங்கிய  எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள்,

1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.

ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.

கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.

நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.

கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.

இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த #பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட
இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது.

ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் #சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.

இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் #விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.

அப்போது,
1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,

2. மக்களை வந்தேமாதரம்  கோசமிட தூண்டியது,

3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து #நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது.

இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் #பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.

ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான்.

பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.

திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி #அலெக்ஸ்_ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார்.

இதற்குள் ஓர் #இரகசியம்_ஒளிந்து இருந்தது.

வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் #ராஜினாமா செய்து ஓடினர்.

அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் #விற்று_விட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா #கப்பலை_வெள்ளையருக்கே_விற்று_விட்டது தான்.

இதனை அறிந்த வ உ சி...

"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.

பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார்
வ உ சி.

நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.

ஓங்கட்டும் உமது புகழ்.

வந்தே மாதரம்




2 Comments:

  1. வந்தே மாதரம் என்போம்
    நம் பாரதத் தாயை வணங்குவோம்!

    ReplyDelete
  2. அவருக்கு நிகர் அவர்தான்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive