Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ஆசிரியர் பகவான் - இது ஓர் ஆய்வு அல்ல,ஆழ்ந்த அனுபவப்பூர்வமான பதிவு

விமர்சனங்கள் வரலாம்...

இருந்தபொழுதும் சரியானது எதுவென்று தெரிந்த பின்னும் அதை செய்யாமல் இருந்தால் அவர்தான் கோழை எனச் சொல்வார்கள்..எனவே எனக்குச் சரியெனப் படுவதை இப்பதிவில் இடுகிறேன்..உங்களுக்கு தவறெனப் பட்டால் கடந்துபோகவும்...
மனித உணர்வில் அழுகை என்பதும், சிரிப்பு என்பதும், கோபம் என்பதும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தது..
ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருந்து பணியாற்றிப் வேறொரு பள்ளிக்குச் செல்லும்பொழுது மாணவர்கள் அழுதனர்..
அதனால் அவர்  ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்கிறனர்.
குடியரசுத் தலைவர் விருது கொடுக்க வேண்டும் என்கிறனர் சிலர்.ஊடகங்கள் உச்சியில் தூக்கிவைத்து கொண்டாடி தீர்க்கின்றன.இத்தனை ஆண்டுகள் யாருக்கும் தெரியாத ஆசிரியர் பகவானின் செயல்பாடுகளுக்கு அளவுகோல் மாணவர்களின் அழுகை..இந்த அழுகையினை பணிமாறுதல்,பணிநிறைவு, பணி உயர்வு எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களிடம் எதிர்கொண்டிருப்பர்..
ஆனால் யாரும் இதனைச் செய்தியாக மாற்றியிருக்க மாட்டார்கள்.அது தங்களது பணி அனுபவத்தில் ஒன்று என எளிதில் கடந்திருப்பர்.
இதனால் நான் ஆசிரியர் பகவானை நான் குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டாம்.
ஆசிரியர் பகவானின் பணிகுறித்தும் அவரது சிறப்பு வாய்ந்த செயல்பாடுகள் குறித்தும் எனது முந்தைய பதிவைக் காணவும்..அவருக்கான அங்கீகாரத்தை மதிக்க வேண்டும். இளம்வயதில் இவரைப் பொன்றவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்..
ஆனால் அதே நேரத்தில்
மாணவர்களின் கல்வித்திறன்
மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு
மாணவர் சேர்க்கை
பள்ளிக் கட்டமைப்பில்
பங்களிப்பு
பள்ளிவளர்ச்சியில் பங்கேற்பு
சமூக அக்கறை
மாணவர் எதிர்காலம் குறித்த முன்னெடுப்புகள் என எவையும் கருத்தில் கொள்ளப்படாமல் மாணவர்கள் அழுதனர் என்பதனை மட்டும் அடையாளமாகக் கொண்டு பிற ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஊடகங்களின் மேம்போக்குத் தனம் எதனை நினைவூட்டுகிறது என்றால்.....
சூப்பர் சிங்கரில் போட்டியாளரையும், பெற்றோரையும் அழவைத்து டி.ஆர்.பி ஏத்துவது,
நடனப் போட்டி என்னும் பெயரில் மார்க் போட்டு அழவைக்கிறேன் என்னும் பெயரில் டி.ஆர்.பி யை எகிற வைப்பது... இவைதான் கண்முன்னே விரிகிறது...
பகவானின் உழைப்பிலோ,
செயலிலோ சிறிதும் குறை சொல்லவில்லை.. ஆனால் இதை ஊடகங்கள் கையாளும் விதம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் வேறு திசைக்கு இழுத்துச் செல்லக்கூடும்..
உணர்ச்சிகளின் பால் உந்தப்பட்டு செய்யப்படும் எந்த ஒரு செயல்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் அறிவியல் ரீதியாக சரியானது அன்று டேனியல் கோல்மான் என்பாரின்  ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..
நுண்ணறிவு அதிகம் கொண்ட ஒருவர்கூட உணர்ச்சிவயப்படும்போது மனச்சமநிலை இல்லை என்றால் தவறான முடிவுகளை மட்டுமே எடுக்க வாய்ப்பு உண்டு என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது..
அழுகை என்பது
அன்பின் வெளிப்பாடு
ஆற்றாமையின் வெளிப்பாடு
கோபத்தின் வெளிப்பாடு
இயலாமையின் வெளிப்பாடு
இப்படி ஏதாவது ஒன்றின் வெளிப்பாடே அன்றி நம் செயல்பாடுகளின் வெளிப்பாடோ, திறமையின் வெளிப்பாடோ அல்ல..
மாணவர்களுக்கு
அறிவை மேம்படுத்துவது மட்டுமல்ல,
உணர்வுகளை கையாளப் பழக்குவதுமே சரியான கல்விப்பணி ஆகும்..
இதன் மூலமே மனமுறிவு,
மனப்போராட்டம் போன்றவற்றில் இருந்து மாணவர்களை காக்கவும் மீட்கவும் முடியும்..
சரியான வழியை காட்டாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து தவறான பாதையைக் காட்டிவிடக்கூடாது...
ஊடகங்களின் சக்தி,
சமூக வலைதளங்களின் சக்தி நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அவை நல்ல முன்னுதாரணங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே விருப்பம்..அதுவே சமூகத்திற்கும் வருங்கால சந்ததிக்கும் நல்லது...

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading