NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் 19.7.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
பழமொழி :
A little pot is soon hot
சிறிய பானை சீக்கிரம் சூடாகும்
பொன்மொழி:
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
-மாத்யூஸ்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
2.எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
நீதிக்கதை :
நாயும் அதன் நிழலும்
The Dog and His Shadow Moral Story in Tamil


முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது. அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.
 செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், “எலும்புத்துண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.
செல்லும் வழியில் ஒரு பாலத்தை வேண்டியிருந்தது. நாய் பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.
அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.
அதனால் அதன் வாயில் இருந்த எலும்புத்துண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.
அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.
நீதி: பேராசை பெரு நஷ்டம்
இன்றைய செய்தி துளிகள் : 
1.நீர்மட்டம் 106.220 அடியை எட்டியது: மேட்டூர் அணை நாளை திறப்பு
2.தொலைநிலைக் கல்வி தொடர்பான விதியை யூ.ஜி.சி. திருத்தியதற்கு இடைக்கால தடை
3.சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கே விரோதமானது: உச்ச நீதிமன்றம்
4.20 ஆண்டுகால சேவையை நிறுத்திக் கொண்டது யாஹூ மெசஞ்ஜர்!
5.டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive