NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018


திருக்குறள்


சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

விளக்கம்:

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

பழமொழி

A little stream will drive a light

சிறு துறும்பும் பல் குத்த உதவும்

பொன்மொழி

இந்த உலகம் பெரிய பயிற்சிக் கூடம். நம்மை வலுப்படுத்திக் கொள்ளவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.
   
      -விவேகானந்தர்

இரண்டொழுக்க பண்பாடு

1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.

பொதுஅறிவு

1.உலகின் மிக நீளமான நதி எது?

நைல் நதி

2.இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?

 கொல்கத்தா (KOLKATTA)

English words and. Meanings

Partner-கூட்டாளி

Quackery- போலித்தனம்

Rapacity -பேராசை

Scare-பயம்

Tread- ஜாக்கிரதையாக



நீதிக்கதை

ஒரு மரத்தடி. பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

எதிரில் ஒரு தட்டு.

அதில் சில நாணயங்கள்.

 அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் ........

அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள்.

அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான்.

இருவரும் நண்பர்கள்.

 அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான்.

ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான்.

 அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான்.

பாட்டு அரசனை கவர்ந்தது.

‘நீ அருமையாக பாடுகிறாய்.

 உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன்.

என்ன வேண்டும் கேள்....!'
 என்றான் அரசன்.

மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.

‘அரசே. !
   நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை.

 அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும்.

இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா.....?' என்று கேட்டான்.

‘இதென்ன பிரமாதம்.

 நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன்.

மதியம் உணவுடன் சந்திக்கிறேன்', என்று சொல்லிவிட்டு அரசன் நகர்ந்தான்.


மதிய உணவை அரசன் கொண்டு வருவான்.

அதைச் திருப்தியாக சாப்பிட வேண்டும்.ஆவலோடு காத்திருந்தான்.

அடுத்த நாள் விடிந்தது.

 அரசனின் வருகைக்காக காத்திருந்தான்.

வழக்கம் போல் பலர் அவனுக்கு உணவு கொடுக்க முன் வந்தார்கள்.

அரசன் கொண்டுவரும் உணவு பற்றிய சிந்தனையால்.......

 மற்றவர்கள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டான்.

மதியம் மணி இரண்டானது.

 மூன்றானது அரசன் வரவேயில்லை.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இரவு எட்டு மணியானது.

 ஆள் நடமாட்டமே இல்லாமல் அந்த இடமே ஓய்ந்து போனது.

கோபத்தோடும் பசியோடும் உட்கார்ந்திருந்தான் பார்வையற்றவன்.

அந்த நேரத்தில் அரசன் அங்கு வந்தான்.

‘தம்பி...!
  எப்படி இருக்கிறாய்....?

 அரண்மனை சாப்பாடு நன்றாக இருந்ததா...?

 எங்கே பொற்காசு மூட்டை...?

 எங்கே குதிரை...?' என்று கேட்டான் அரசன்.

‘சாப்பாடா....? காலையிலிருந்து பசியோடு காத்திருக்கிறேன்.

 இப்போது தானே நீங்களே வருகிறீர்கள்', என்றான் சோகமாக.

யோசித்தான் அரசன்.

பிறகு பேசினான்.

‘சாப்பாட்டுக் கூடையோடு கிளம்பினேன்.

திடீரென்று தலை சுற்றியது.

 வைத்தியர்கள் என்னை சோதித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு சொன்னார்கள்.

அதனால்...,
என்னுடைய பாதுகாவலன் மூலமாக உணவை கொடுத்து அனுப்பினேன்.

 அதை நீ சாப்பிடவில்லையா....?' என்றவாறு பக்கத்தில் இருந்த பாதுகாவலனை விசாரித்தான்.

‘அரசே..!
 இவரிடம் உணவை கொடுத்தேன்.

ஆனால், இவர் வாங்க மறுத்துவிட்டார்.

அதனால்..,
அதை திரும்ப எடுத்துச் செல்வதைவிட....

 யாரிடமாவது கொடுத்தால் உபயோகமாக இருக்குமே என்று நினைத்து.......

 பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்து விட்டு அரண்மனை திரும்பினேன்.

 உங்களிடம் விஷயத்தை தெரிவிப்பதற்காக வந்தேன்.

 நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள்.

அரசியாரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்', என்றான் பாதுகாவலன்.

தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் அரசன்.

‘தம்பி..!
நடந்த விவரங்களை என்னால் யூகிக்க முடிகிறது.

அப்போது அங்கிருந்த சாது பேசினார்.

அரசன் சாப்பிடும் உணவை கேட்டாய்.
  ‘தானே நேரில் வந்து கொடுக்கிறேன்', என்று சொன்னது அரசனின் பெருந்தன்மை.

ஆனால்,

 அரசன் வந்து நேரில் கொடுத்தால் மட்டுமே அது அரச உணவு என்று நீ நினைத்தாய்.

 அதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கு காரணம்.

 இதுவரை நடந்தது மட்டுமே உனக்குத் தெரியும்.

 இதற்கு மேலும் பல விஷயங்கள் நடந்துள்ளது',

அந்த இடமே அமைதியானது. சாது மீண்டும் பேசத்தொடங்கினார்.

‘உணவை கொடுத்து அனுப்பிய அரசன் இரண்டாவது பாதுகாவலனை அழைத்தான்.

ஆயிரம் பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி,

 ‘மரத்தடியில் அரச உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பவனிடம்.......

 இந்த மூட்டையை ஒப்படைத்துவிட்டு வா', என்று அனுப்பினார்.

இரண்டாவது காவலன் சாப்பிட்டுக் கொண்டிருந்த உனது நண்பனிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டு நகர்ந்தான்.

 அந்த பொற்காசு உனக்காக கொடுக்கப்பட்டது.

குழப்பம் இதோடு தீரவில்லை.

 அரசன் மூன்றாவதாக ஒரு காவலனை அழைத்தான்.

 அவனிடம் ஒரு குதிரையை கொடுத்து,

 மரத்தடியில் பொற்காசு மூட்டையுடன் இருப்பவனிடம் குதிரையை கொடுக்கும் படி அனுப்பினான்.

பொற்காசு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த உன் நண்பன் குதிரையை பெற்றுக் கொண்டு நாட்டைவிட்டே போய்விட்டான்.

இப்போது உன்னுடைய நண்பன் செல்வந்தன்.

 உன்னுடைய புரிதலில் ஏற்பட்ட சிறிய தவறால் நீ இன்று பசியோடு இருக்கிறாய்.

 இதை விதி என்பதா....?

 அல்லது
  வாய்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் கோட்டைவிட்டாய் என்று சொல்வதா......?

ஒன்று மட்டும் நிச்சயம்.

 உன்னுடைய வரம் உனக்கு சாபமாகவும்......,

உன் நண்பனுக்கு வரமாகவும் மாறிவிட்டது',

அமைதியாக இருந்த அரசன் பேசினான்.

‘கவலைப்படாதே...!

நாளை உனக்கு உணவு,

 பொற்காசு,
குதிரை
ஆகிய எல்லாவற்றையும் மீண்டும் அனுப்பிவைக்கிறேன்',

 என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.

அடுத்த நாள்,

அரசனின் வருகைக்காக காத்திருந்தான் பார்வையற்றவன்.

அரசன் வரவேயில்லை.

 முந்தய இரவே உடல் நிலை சரியில்லாத அரசன் ....

 இறந்து போன செய்தி இன்னமும் அவனுக்கு எட்டவில்லை.

‘வாய்ப்பு' என்பது எல்லோரிடமும் சொல்லிவிட்டு வந்து கதவை தட்டுவதில்லை.

அப்படியே சொல்லிவிட்டு வந்தாலும்.......

 அதை மிகச் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் வேண்டும்.

இன்றைய  செய்திகள்

* சென்னையில் உள்ள மின்சார ரயில்களில் கதவுகள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

* தில்லியில் சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளர் மாலிக்குடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததது..

* வெனிசூலா கரன்ஸியிலிருந்து ஐந்து பூஜ்யங்களை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடூரோ வியாழக்கிழமை அறிவித்தார்.

* கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு நடைபெற்று வந்த முதல்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. கலந்தாய்வின் முடிவில் அனைத்து இடங்களும் நிரம்பின.

*  இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என சமன் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

Today's Headlines

🌸
:Motorcycle rally to set street on fire this weekend. The fifth round of the MRF MOGRIP FMSCI national rally championships will begin from hotel GOKULAM PARK in Chinniampalayam at 5 p.m. on saturday🏍🏍🏆

🌸 Tirupur: Noyyal river rejuvenation project that will be implemented at a cost of Rs 310 crores will check pollution in the river , Environmental Minister KC karuppannan told reporters on the sidelines of a review meeting on a project cell that collectorate on Thursday🌊

🌸 Udhagamandalam: 8 high -,power waste collection vans arrive to keep ooty clean .Door to door garbage collection implemented in all 36 wards . Micro composting zones have also been set up in the town and garbage collector would be sent to these composting yards for further segregation🤝
🌸 Students at the exhibition of prehistoric parts and shreds conducted as a part of 28 th conference of the Archaeological society in Tiruvannamalai👍
🌸A mixture of two metals — silver and gold — shows superconductivity
For the first time, researchers from the Indian Institute of Science (IISc) Bengaluru have been able to achieve superconductivity at ambient temperature and pressure. A large number of materials have been found to undergo normal to superconducting transitions.👆👌👏💐💐💐

Prepared by

Covai Women ICT_ போதிமரம்ட




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive