Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

சென்னை அரசு சட்டக்கல்லூரி புது கட்டடங்களுக்கு மாற்றம்

'சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள,
அரசு சட்ட கல்லுாரி, வரும், 9ம் தேதி முதல், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள புதிய கட்டங்களில் இயங்கும்' என, தமிழக சட்டக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, சட்டக்கல்வி இயக்குனர், சந்தோஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நீதிபதி சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, சென்னையில் உள்ள அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி இடமாற்றம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த புதுப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதுார் ஆகிய இடங்களில், மாணவ, மாணவியர் விடுதிகளுடன், 117.78 கோடி ரூபாய் செலவில், அரசு சட்டக்கல்லுாரி கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன.இந்த கட்டடங்களை, முதல்வர் பழனிசாமி, இம்மாதம், 2ம் தேதி திறந்து வைத்தார்.

இதையடுத்து, அரசு சட்டக்கல்லுாரிகளை, புதிய இடத்துக்கு இடமாற்றம் செய்ய, ஜூன், 28ல், தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, வரும், 9ம் தேதி முதல், புதிய கட்டடங்களில் அரசு சட்டக்கல்லுாரிகள் இயங்கும்.சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், ஐந்தாண்டு சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு, புதுப்பாக்கத்திலும்; மூன்றாண்டு மற்றும், எல்.எல்.எம்., படிக்கும் மாணவர்களுக்கு, பட்டறை பெரும்புதுாரிலும் உள்ள கட்டடங்களில், வகுப்புகள் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading