NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேன்சர் நோயை தவிர்க்க வேண்டுமா?

கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம்
மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே.




அது மட்டுமில்லாமல் ரீஃபைன்ட் ஆயில், ரீபைன்ட் சர்க்கரை, ரீஃபைன்ட் உப்பு என கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்களை பயன்படுத்துவதே.
சாலையோர கடைகளில் திரும்பத் திரும்ப காய்ச்சும் எண்ணெய்களில் பொரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். திரும்பத் திரும்ப எண்ணெய்யைக் காய்ச்சும் போது அதில் உணவுப் பொருட்கள் திரிந்த கார்பன் அதிகமாகிறது.
நம் முன்னோர்கள் சின்ன சின்ன நோய்களுக்கு மருத்துவரிடம் செல்லாமல் நாட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்சமயம் ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு கூட தன்னிச்சையாகவும், மருத்துவரை நாடி மருந்து மாத்திரை வாங்கி குழந்தைப் பருவம் முதல் அதிகமாக உட்கொண்டு உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி செய்து கொள்கிறோம். இதனால் நோய் குறைவது தவிர நோய்க்கான நச்சு வெளியேறாமல் உடலில் தங்கி பக்க விளைவுகளாக கேன்சர் மற்றும் பல வியாதிகளுக்கு காரணியாகின்றன.
பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் பால், தயிர் போன்றவைகள் வெகு நாள்கள் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்ûஸடு என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இது கேன்சருக்கு வழிவகுக்கும். அதேபோன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் உப்பில் சேர்க்கப்படும் ஃபுளூரைடு என்ற வேதிப் பொருளும் கேன்சருக்கு வழிவகுக்கும்.
பிராய்லர் கோழிகள் சதைப்பற்றாக இருக்க போடப்படும் ரசாயன ஊசி மருந்தும் நமக்கு புற்று நோய்க்கான காரணியாகிறது. காய்கறிகள், தர்பூசணி போன்ற பழங்களின் நிறங்கள் எடுப்பாக இருக்க ஊசிகள் மூலம் கெமிக்கல் செலுத்தப்படுகிறது. இவைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது கேன்சர் செல்கள் உருவாகின்றன.
மைதா மாவில் ஜவ்வு போன்ற ரப்பர் தன்மைக்காக அல்லோக்ஸின் என்ற கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன. இது கேன்சர் செல் உருவாகக் காரணியாகிறது.
செக்கிலிருந்து நேரடியாக கிடைக்கும் எண்ணெய், நாமே வீட்டில் தயார் செய்யும் பொடிகள், மசாலா பொருட்கள், வீட்டில் வேக வைத்து தயாரிக்கும் உணவு வகைகள் ஆகியவைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் கேன்சர் நோயிலிருந்து தப்பிக்க நல்ல தீர்வாக அமையும்.
பூண்டு உண்பதின் மூலம் கேன்சரை வரவிடாமல் தடுப்பதிலும், வந்தவர்களுக்கு அதை விரைந்து குணப்படுத்துவதிலும் முக்கிய பங்குண்டு.
கேரட்டில் அதிகமுள்ளபீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துவதோடு அது நமது உடல் செல்களை அழிப்பதையும் தடுக்கிறது.
தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு அதில் உள்ள லிகோபின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டே காரணம். இது கேன்சர் செல்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. உடல் செல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி இன்ஃபெக்ஷன் மற்றும் கேன்சரை ஏற்படுத்தும் இன்ஃபளமேஷன் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இது பெண்களின் மார்பக கேன்சரையும், குடல் சம்பந்தமான கேன்சரையும் குணப்படுத்தும்.
எள்ளில் லிக்னன் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது கேன்சர் செல்களாக உருவெடுக்கும் இன்ஃப்ளமேஷன் செல்களை அகற்றுகிறது.
கேன்சர் வருவதற்கு விட்டமின் பி17 குறைவதும் ஒரு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நெட், உலர்ந்த திராட்சை ஆகியவைகளில் விட்டமின் பி17 அதிகம். சோயா, பட்டாணி போன்ற பருப்புகள் ஈஸ்ட் ரோஜன் கேன்சரை கட்டுப்படுத்துகிறது.
கேன்சரை தடுப்பதற்கும் குறைக்கவும் சிலவகை பயிற்சிகள் உண்டு. கிரியை யோகம் மூலம் ஃபிரிரேடிகல் கழிவுகளை வெளியேற்ற முடியம். அதுபோன்று நீராவி குளியில், வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், நிற சிகிச்சை, காந்தக தண்ணீர் குடித்தல், உபவாசம் போன்ற முறைகளில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தலாம். இதனால் கேன்சர் வருவதை தவிர்க்கலாம்





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive