Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 27.7.2018

மேஷம் :-

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம் :-
தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்துகொள்ளவும். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : இழுபறியில் இருந்த வேலைகள் முடியும்.
மிருகசீரிடம் : அமைதியை கடைபிடிக்கவும்.
மிதுனம் :-
நண்பர்களால் சுப விரயம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய செயல் திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : சுப விரயம் உண்டாகும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : தேவைகள் பூர்த்தியடையும்.
கடகம் :-
தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
சிம்மம் :-
வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக மனதில் எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயம் அடைவீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : இலாபம் அடைவீர்கள்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
கன்னி :-
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொதுக்கூட்ட பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. வாரிசுகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். பங்குதாரர்களின் ஆதரவால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
துலாம் :-
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சுபிட்சம் உண்டாகும்.
சுவாதி : நட்பு கிடைக்கும்.
விசாகம் : கவலைகள் நீங்கும்.
விருச்சகம் :-
இளைய சகோதரர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் வேண்டும். கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அனுஷம் : எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும்.
கேட்டை : ஆசிர்வாதம் கிடைக்கும்.
தனுசு :-
நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சாதகமான சூழல் அமையும்.
பூராடம் : அமைதியுடன் செயல்படவும்.
உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
மகரம் :-
உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கும்பம் :-
எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு கிடைக்கும். உறவுகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.
சதயம் : விமர்சனங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
மீனம் :-
பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது அவசியம். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
ரேவதி : சோர்வு உண்டாகும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading