NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 4 தேர்வில் 14.26 லட்சம் பேர் தகுதி! கூடுதலாக 2000 இடங்கள் சேர்ப்பு

 “குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில்
  14.26 லட்சம் பேர் தகுதி ெபற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: குரூப் 4 பதவிக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட்  www.tnpsc.gov.in. http://results.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 14 லட்சத்து 26 ஆயிரம் 10 பேர் தகுதி ெபற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் 6,28,443 பேர்,  பெண்கள் 7,97,532 பேர், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை சேர்த்து நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் அதிகப்படியானோர் பங்கேற்றனர். எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் எழுதியதாக சரித்திரம் இல்லை. இத்தேர்வில் தகுதியானவர்களில் சுமார் 33,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்படுவர்.
அதாவது, 1:3 என்ற அடிப்படையில்  அழைக்கப்படுவார்கள். அவர்களின் விவரம் இன்னும் 3 நாட்களில் தேர்வாணையம் வலைதளம், எஸ்.எம்.எஸ்., இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வர வேண்டாம். அதற்கு பதிலாக அரசின் இசேவை மையங்களுக்கு சென்று தங்களுடைய சான்றிதழை வருகிற 16ம் தேதி முதல் தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 30ம் தேதி சான்றிதழை பதிவேற்றம் செய்ய கடைசி நாள்.
அதைத் தொடர்ந்து அந்த  சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு அக்டோபர் கடைசி வாரத்தில் கவுன்சலிங் தொடங்கும். கவுன்சலிங்கிற்கு 200 பேர் அழைக்கப்படுவார்கள். குரூப் 4 தேர்வு அறிவிக்கும்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9,351 என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 11,280 ஆக உயர்ந்துள்ளது. வி.ஏ.ஓ. எண்ணிக்கை 494லிருந்து 1,107 ஆக அதிகரித்துள்ளது. இளநிலை உதவியாளர் (பிணையம்) 226, இளநிலை உதவியாளர் (பிணையற்றது)-4722, வரித்தண்டலர்- 52, தட்டச்சர்- 3974, சுருக்கெழுத்து தட்டச்சர்- 931, நில அளவர்- 102, வரைவாளர்- 156 ஆகவும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஓராண்டுக்கான கால அட்டவணையில் அறிவித்தப்படி 9 தேர்வுகள் நடத்துவதில் காலதாதமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வருந்துகிறோம். இதனை 2, 3 மாதத்தில் சரி செய்து விடுவோம். கணினி வழி மூலமாக இதுவரை 27 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு குழப்பமோ, குந்தகமோ ஏற்படவில்லை. தேர்வர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வரவில்லை.
கணினி வழியாக குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த வசதி உள்ளது. கணினி மூலம் தேர்வுகள் நடத்தினால் விரைவில் தேர்வுகளை வெளியிட முடியும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
2017ம் ஆண்டு நடந்த குரூப் 1 முதன்மை தேர்வில் எந்தவித  முறைகேடும் நடைபெறவில்லை. முதன்மை தேர்வுக்கான விடைகள் திருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.  அதாவது, தேர்வாணையம் ஓராண்டு கால அட்டவணையில் அறிவித்தபடி செப்டம்பர்  8க்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு தனித்தனியாகத்தான் தேர்வுகளை நடத்தி வந்தது. இதனால், அதிக செலவு ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி கூறி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை ஒன்றாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இதனால், அரசுக்கு 12 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
2016ல் நடந்த குரூப் 1 தேர்வு  முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் நடத்தும் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி முழு ஒத்துழைப்பு கொடுத்து  வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.





3 Comments:

  1. குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டுள்ளபோது நாமும் எத்தனை தேர்வுகளுக்குத் தான் படித்துக் கொண்டே இருப்பது? தேர்ச்சி பெற்றும் என்ன பிரயோஜனம்? என்ன விடிவுகாலம்? இஷ்டத்திற்கு தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து வீடு வீடாகச் சென்று ஆள்பிடித்து இருக்கும் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் படித்துவிட்டு இப்பொழுது தேர்வு, தேர்வு என்று வாழ்க்கையைத் தொலைத்து தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலைக்கு வழி இல்லாமல் நொந்து கிடக்கும் வகையில் அரசியல் வியாதிகளும், அரசு அதிகாரிகளும் நாளுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்து வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தகுதி இருக்கா என்றார்கள்! அதிகமாகவே இருக்கு என்றோம். அதில் வயது அதிகமாக உள்ளவர்கள் பணிவாய்ப்பே பெற்றுவிடக்கூடாது என்று அறிவியல் பூர்வமான முறையில் கணக்கிட்டு வாழ்க்கையை கெடுத்தார்கள். இப்பொழுது மற்றோர் தேர்வு எழுத வேண்டும். இப்படியே தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பது தற்போது படித்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் நிலை? வரலாறு காணாத கல்விச் செலவுகள் என்று சமாளித்தாக வேண்டுமே! நாங்கள் போய் கோச்சிங் சென்டரிலேயே தங்கி பயில முடியுமா? எப்போது இந்த நிலை மாறுமோ?.....

    ReplyDelete
  2. Tamilnadu government strictly followed the exam ruls

    ReplyDelete
  3. எங்களுக்கும் அரசு பணி கிடைக்குமா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive