NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்றலில் குறைபாடு: பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கற்றலில் குறைபாடு மற்றும்
உளவியல் ஆலோசனை குறித்த முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேர் பிகேவியரல் சயின்சஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் படிப்பை வழங்குகின்றன.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இந்த பட்டயப் படிப்பு வழங்கப்பட உள்ளது. ஏதாவது பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்பை முடித்தவர்கள் பள்ளிகளில் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களாகவும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் பணியாற்ற முடியும்.
குழந்தைகள் நலம், நரம்பியல், ஞாபக மறதி நோய், தூக்கக் குறைபாடு, மண வாழ்க்கை தொடர்பான உளவியல் பிரச்னைகள், வளர் இளம்பருவ பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை அளிக்கும் வகையில் முதுநிலை ஆலோசனை பட்டயப்படிப்பு வழங்கப்பட உள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், மாற்று மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், இயன்முறை மருத்துவம், ஆக்குபேஷனல் தெரப்பி, ஸ்பீச் தெரப்பி, சமூக அறிவியல், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றோர் முதுநிலை ஆலோசனைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பை படித்தவர்கள் பள்ளி, மருத்துவமனைகள், கிளினிக்குகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் ஆலோசகர்களாகப் பணியாற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு 98439 74984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





1 Comments:

  1. நான், அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் .இப்படிப்பில் சேர விரும்புகிறேன். கட்டணம் ,பிற விபரங்கள் வழங்குக.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive