NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கசக்கவே கசக்காத பாகற்காய் டீ!



பாகற்காய் என்றாலே எல்லோரும் முகத்தை சுழித்துக் கொள்கிறோம். "யப்பா... கசப்பு" என்று ஏதோ அதைக் கடித்து விட்டதுபோல ஃபீலிங் கொடுப்போம். ஆனால், பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அனைவருக்குமே தெரியும்.

ஆகவேதான், எந்த விதத்திலாவது நம் சாப்பாட்டில் பாகற்காயை சேர்த்து விட அம்மாக்களும் பாட்டிகளும் முயற்சிக்கிறார்கள்.

பாகற்காய்

பாகற்காய் குழம்பு, பாகற்காயை சிறிதாக நறுக்கிச் செய்யும் பொறியல், பாகற்காய் கூட்டு என்று வித்தியாசமாக செய்து தருவார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் பாகற்காயின் இயல்பான கசப்பே நம்மை காததூரம் ஓட வைக்கும். கசப்பை சகித்துக் கொண்டு சாப்பிட்டு விடுமளவுக்கு நம் குடும்பங்களில் நன்றாகவே பாகற்காயை கொண்டு சமையல் செய்கின்றனர்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு, பாகற்காயின் தனிச்சிறப்பாகும். நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும்.

பலே பாகற்காய் டீ

உலர்ந்த பாகற்காயை சீவி, அந்த துண்டுகளை நீரில் போட்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்டதென கூறி விற்கப்படுகிறது. பாகற்காய் டீ தயாரிப்பதற்கான பொடி அல்லது சாறு இப்போது கடைகளிலும் கிடைக்கிறது. பாகற்காய் சாற்றினை போல் அல்லாமல் பாகல் இலை, காய் அல்லது விதை எதைக்கொண்டு வேண்டுமானாலும் பாகல் டீயை தயாரித்துக் கொள்ள முடியும்.

உடல்நலம் காக்கும் பாகற்காய் டீ

சர்க்கரை நோய்க்கு நிவாரணி: பாரம்பரியமாகவே இயற்கை முறையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பாகற்காயை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு பாகற்காய் டீயும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

பாகற்காய் அழற்சியை தடுக்கும் இயல்பு கொண்டது. ஆகவே, இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் பாகற்காய் டீ அருந்தலாம்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்

கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய குணம் பாகற்காய் டீக்கு உள்ளது. அஜீரண பிரச்னையை அகற்றி, குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு:

பாகற்காயில் உள்ள வைட்டமின் 'சி' நோய் தொற்றுக்கு எதிராக போரிடக்கூடியது. பாகற்காய் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பார்வை திறன் உயரும்

பாகற்காய் டீ, கண்களின் பார்க்கும் திறனை உயர்த்தக்கூடியது. பாகற்காயில் உள்ள வைட்டமின் 'ஏ', பீட்டா கரோட்டினாக உடலில் மாற்றம் பெறும். பீட்டா கரோட்டின் கண் பார்வையை அத்தியாவசியமானது.

பாகற்காய் டீ தயாரிப்பது எப்படி?

மிக எளிய முறையில் வீட்டிலேயே பாகற்காய் டீ போட்டுக்கொள்ளலாம். பாகற்காயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி அதை நன்கு உலர வைத்து அல்லது பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான நீர் மற்றும் இயற்கை சுவையூட்டியாக தேன் அல்லது அகாவ் என்னும் நீல கற்றாழை சாறும் தேவை. காய வைத்த பாகல் இலைகளை கொண்டு டீ தயாரிக்கலாம். ஆனால், பாகற்காய் எளிதாக கிடைக்கக்கூடியது. ஆகவே, காயை பயன்படுத்தலாம்.


செய்முறை

பாத்திரம் ஒன்றில் நீரை கொதிக்க வைக்கவும். உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும்; இளஞ்சூடாகவும் வைக்கலாம். இப்படிச் செய்வதால் பாகற்காயிலுள்ள சத்துக்கள் நீரினுள் இறங்கும். அடுப்பை விட்டு பாத்திரத்தை இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் அல்லது கப்களில் எடுத்துக்கொள்ளவும்.

தேன் அல்லது அதுபோன்ற இயற்கை இனிப்பூட்டியை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்க்கவும். பெரும்பாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவே பாகற்காய் டீ பருகுவதால், இனிப்புக்காக எதையும் சேர்க்காமல் இருப்பது கூடுதல் நன்மை தரும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும். ஆகவே, உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிப்பது நல்லது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive