Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.18

திருக்குறள்


நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.

விளக்கம்:

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

பழமொழி

Empty vessels make more noise

குறைகுடம் கூத்தாடும்

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.

   - டாக்டர். ராதாகிருஷ்ணன்

பொது அறிவு

1.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

 ஜெனிவா

2. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?

 நியூயார்க்

English words and. Meanings

Wipe.    துடைத்தல்
Weal.    இன்பமும் துன்பமும்
Wallet   கைப்பை
Wager   பந்தயம்
Whoop  கூச்சல்


தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

துளசி

1. சளியை குணப்படுத்த உதவும்.

2.இந்த துளசியானது பகலிலும், இரவிலும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடுவதால் இதனை வீட்டில் வளர்ப்பது மிக நன்று.

நீதிக்கதை

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ஜவர்லால்.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.

ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் ஜவர்லால் வந்தார்.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.

“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

ஜட்ஜ்  ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

இன்றைய செய்திகள்

04.09.18

* ஈரோடு தடப்பள்ளி கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் குறுவை சாகுபடி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

* சென்னையில் வறண்ட நீர்நிலைகளில் அதிகப்படியான தண்ணீரை சேமிக்க புவியியலாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

* உக்கடம் குளத்தினை மேம்படுத்தும் பணியினை கோவை மாநகராட்சி  துவக்கியுள்ளது.

* 2022 -ல் அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற உள்ளதால் அனைத்து நாட்டு வீரர்களையும் இப்போட்டிகளில் பங்கேற்க சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Today's Headlines

🌸Erode:As water was released in Thadapalli canal for irrigation, cultivation activities, mainly paddy, is in full swing in Gobichettipalayam block here.
🌸Chennai:Geologist suggests storing excess water in dry water bodies🌹
🌸Coimbatore:Corporation begins work on lake development project in ukkadam🌹
🌸Asian games:Hangzhou in China welcomed all the athletes to the next Games which it will host in September 2022.🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading