NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.18

செப்டம்பர் 7 - மன்னிப்பின் தினம்



திருக்குறள்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

விளக்கம்:

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைச்சல் இல்லாத நிலமாகக் கருதப்படும்.

பழமொழி

Silence gives consent

 மௌனம் சம்மதம்

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

பொன்மொழி
 
கல்வி -
  பெருமைக்காகத் தேடி பெறுவதில்லை.
பெற்றதைக் கொண்டு பெறுமைத் தேடிக் கொள்வது

        - ஆதிரா

பொது அறிவு

1.ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு உள்ளது?

 சென்னை - கோயம்பேடு

2. இந்தியாவின் முதல் பெண் தலைமை  தேர்தல் ஆணையர் யார்?

V.S. ரமாதேவி

English words and. Meanings

Zeal         ஆர்வம்
Zephyr.    இளங்காற்று
Zest.         நற்சுவை
Zone.         மண்டலம்
Zodiac.    ராசி மண்டலம்

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

 *கற்றாழை*

1. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

2. தோல் சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

நீதிக்கதை

 ‘நான்தான் பலசாலி’ ‘நான்தான் பலசாலி’ என்று சொல்லி சிங்கம் எப்பொழுது பார்த்தாலும் காடு மேடெல்லாம் தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தது.

இந்த செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் சிங்கத்தின் தற்பெருமையை ஒருவரும் அடக்கமுடியாமல் அடங்கி ஒடுங்கி இருந்தனர்.

அந்தக் காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தை ஒட்டி ஒரு நாவல் மரம் இருந்தது. அதில் விச்சித்திரன் என்ற அணில் வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், விசித்திரனும் உயிர்த் தோழர்களாகப் பழகி வந்தனர்.

சிங்கம், அணிலைப் பார்த்து ‘மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ மரியாதை இல்லாமல் மேலே இருப்பதா? நீ என்னைவிட பெரியவனா?  கீழே வந்து என்னை வணங்கி நில். இல்லை தோலை உரித்து கழுகுக்குப் போட்டு விடுவேன்.’ என்று அதட்டியது.

அணில் பயந்து போய்ச் சிங்கம் சொன்னது போல் நடந்தது.

சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே வந்தது நட்சத்திர ஆமை.

தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, ‘வசித்திரா சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டுத் தலைகுனிந்து நிற்கறே? உலகில் வலிமை உள்ளவர்கள் வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வதுதானே வழக்கம்? யானையிடம் இப்படி அதனால் சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.

நண்பா சிறியவர்  பெரியவர் என்றாலும் தன்மானம் பொதுதானே? தேவை இல்லாமல் இன்னொருவருக்கு அடங்கி ‘சலாம்’ போடுவது கேவலம் இல்லையா? அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள்தானே? என்று கொதித்தது.

‘நன்பா உன் ஆதங்கம் புரிகிறது. இதன் கொட்டத்தை அடக்கத்தான் வேண்டும். என் அம்மா இதன் கெடுபிடிக்கு அடங்க மறுத்ததற்காக அதை கொன்றுவிட்டது, எனக்கும் இதைப் பழிக்குப்பழி வாங்க தான் ஆசை. அதை எப்படி செய்யலாம்?’

அப்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.

‘நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் கொட்டத்தை நான் அடக்குகிறேன்.

அதோ அந்த ஆலமரத்தடியில் தானே சிங்கம் உறங்கும். நாளை அங்கு வந்துவிடுங்கள். ‘யார் பலசாலி’ என்று நிரூபிக்கிறேன்’ என்று ஆலமரத்தில் சென்று தங்கியது.

வழக்கம்போல சிங்கம்  ஆலமரத்தடியில் இளைப்பாறியது.

ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.

எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாகச் சென்று நுழைந்து கொண்டு குடைந்தும் கடித்தும் இம்சைப்படுத்தியது.

சிங்கம் வலி தாங்க முடியாமல், ‘அய்யோ... அய்யோ... வலி உயிர்போகுதே. காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என்று அலறியது.

‘நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளவும்’
என்று சிரித்தது எறும்பு.

அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்து சிரித்துக் கூத்தாடின.

ஒரு கட்டெறும்பிடம் தன்பலம் பலிக்காமல் போகவே, சிங்கம் தன் ஆணவத்தை கைவிட்டது.

ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி கூறவே, எறும்பு சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது.

அன்றில் இருந்து சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது.

இன்றைய செய்திகள்

07.09.18

*   சென்னையில் விபத்துகளை குறைக்கும் வகையில்  தானியங்கி அபராத முறையை(ஏஎல்எஸ்) துவங்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர. தெரிவித்தார்.

* கோவில்பட்டியில் உள்ள கே.ஆர்.ஏ. வித்யாஸ்ராம் மெட்ரிக் பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளுக்கான ஒருங்கிணைந்த ஆய்வகம் திறக்கப்பட்டது.

* இராமேஸ்வரம் தீவை மற்ற பகுதிகளோடு   இணைக்கும் பாம்பன் ரயில் பாலத்தின்  ஸ்கேர்சர் இடைவெளியை மாற்றுவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

* 52 வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  ஜூனியர் கலப்பு ஏர் ரைடர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை ஷிரியா அகர்வால் மற்றும் திவான்ஸ் பான்வார் வென்றனர்.

Today's Headlines

🌸 Chennai:The State government, in a move to bring down accidents, will be launching the Automatic Fining System (AFS) on GST Road, said Transport Minister M.R. Vijayabhaskar. The system will monitor lane discipline and rash driving.💐
🌸Kovilpatti:An Atal Tinkering Lab was inaugurated at KRA Vidyashram Matric School in Kovilpatti on Wednesday.💐
🌸Ramanathapuram:The railways has decided to shelve replacement of the Scherzer’s span on the Pamban rail bridge — connecting Rameswaram island with the mainland — and instead build a new bridge parallel to the existing one🌹
🌸Sports;Shreya Agrawal and Divyansh Panwar won the junior mixed air rifle bronze behind Italy and Iran in the 52nd World Shooting Championship in Korea on Wednesday.💐🏆

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive