Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று செப்டம்பர் 17


செப்டம்பர் 17 (September 17) கிரிகோரியன்
ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.
1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.
1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.
1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.
1849 – அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.
1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[1]
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.
1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
1978 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
1988 – தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
1991 – எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.
1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.


பிறப்புகள்
1764 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786)
1826 – பேர்னாட் ரீமன், செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866)
1857 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (இ. 1935)
1864 – அனகாரிக தர்மபால, 1933), இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933)
1879 – ஈ. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)
1889 – வ. ரா., தமிழக எழுத்தாளர்
1895 – வெ. சாமிநாத சர்மா, தமிழறிஞர் (இ. 1978)
1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது சனாதிபதி (இ. 1981)
1906 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 2வது அரசுத்தலைவர் (இ. 1996)
1913 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ. 2002)
1915 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011)
1930 – லால்குடி ஜெயராமன், இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013)
1939 – மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி
1944 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி
1950 – நரேந்திர மோதி, இந்தியாவின் 15வது பிரதமர்
1953 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015)
1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்
1965 – பிறையன் சிங்கர், அமெரிக்க இயக்குநர்
1986 – ரவிச்சந்திரன் அசுவின், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
1179 – பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098)
1621 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)
1911 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844)
1933 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)
1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)
1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)
1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)
1994 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1902)
2013 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913)
சிறப்பு நாள்
ஆத்திரேலியக் குடியுரிமை நாள்
ஆசிரியர் நாள் (ஒண்டுராசு)

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading