Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று :21.09.2018

செப்டம்பர் 21 கிரிகோரியன்
ஆண்டின் 264 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 265 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 101 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1792 – பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
1860 – இரண்டாம் ஓப்பியம் போர்: ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் தோற்கடித்தன்னர்.
1896 – பிரித்தானியப் படைகள் சூடானின் டொங்கோலா நகரைக் கைப்பற்றினர்.
1921 – ஜெர்மனியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
1934 – ஜப்பானில் மேற்கு ஹொன்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் கொல்லப்பட்டனர்.
1938 – நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1939 – ருமேனியாவின் பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1942 – மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1964 – மோல்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1972 – பிலிப்பீன்ஸ் அதிபர் பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.
1981 – பெலீஸ், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1989 – இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 – மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1995 – விநாயகரின் சிலைகள் பால் குடிப்பதாக வதந்தி பரப்பட்டது.
1999 – தாய்வானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
2004 – பூர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
1866 – எச். ஜி. வெல்ஸ், ஆங்கில எழுத்தாளர், (இ. 1946)
1909 – குவாமே நிக்ரூமா, கானா பிரதமர் (இ. 1972)
1954 – சின்சோ அபே, யப்பானிய அரசியல்வாதி
1957 – கெவின் ரட், ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமர்
1963 – கேட்லி அம்ப்ரோஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பந்தாளர்
இறப்புகள்
1971 – பெர்னார்டோ ஹுசே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1989 – ராஜினி திரணகம, இலங்கையின் மனித உரிமை மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் (1954)
2007 – விஜயன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
2008 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் 4வது ஜனாதிபதி (பி. 1922)
சிறப்பு தினம்
உலக அமைதி தினம்
மோல்ட்டா – விடுதலை தினம்.(1964)
பெலீஸ் – விடுதலை தினம் (1981)
ஆர்மேனியா – விடுதலை தினம் (1991)
தொகுப்பு
✅நாட்டு ⚖ நடப்பு

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading