NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' இல்லை: தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

*புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பிளஸ் 1 பாடத்துக்கு,
'ப்ளூ பிரிண்ட்' வழங்கப்படாததால், அரசு பள்ளி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்


*இதனால், வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது


*தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது


*இதில், பிளஸ் 1 பாடத்திட்டம், நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் படுத்தும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்டது

*கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது


*மேலும் தேர்வில், சிந்தனைத்திறனை தூண்டும் வகையில், பாடப்புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டதால், புதிய பாடத்திட்டத்துக்கான, 'ப்ளூ பிரிண்ட்' வெளியிடவில்லை


*இதனால், பாடங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரிய வைக்க முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்


*இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, பிளஸ் 1 பொதுத்தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் நடத்தப்பட்டது


*அதில், பாடத்தில் உள்பகுதியிலிருந்து வினாத்தாள்கள் கேட்டதற்கே, மாணவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. 28 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், சலுகை மதிப்பெண் மூலம், தேர்ச்சி விகிதம் அதிகரித்து காட்டப்பட்டது


*நடப்பு கல்வியாண்டில், மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில், அதிக பாடங்கள் அடங்கியுள்ளன. இவற்றை முழுமையாக நடத்த, பள்ளி வேலைநாட்கள் போதாது


*பொதுவாக, அரசு பள்ளிகளில் பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாத, ஏழை, எளிய மாணவர்கள் பெரும்பாலும் இருப்பதால், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதே கடினமானதாக இருக்கும்


*இதனால், அரசு பள்ளிகளில், தேர்ச்சி மதிப்பெண்களை பெறும் வகையில், குறிப்பிட்ட பாடப்பகுதிகளை மட்டுமே நடத்தி, தேர்வுக்கு தயார் செய்வது வழக்கம்


*அரசு பள்ளி மாணவர்களில், 98 சதவிகிதம் பேர், முழு பாடங்களையும் படிப்பதில்லை


*இப்படியிருக்கும் போது, 'ப்ளூ பிரிண்ட்' வழங்கப்படாததால், எந்த பாடத்துக்கு, எந்த அளவுக்கு தேர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரியவில்லை.கல்விச்சுடர்


*குறிப்பிட்ட பாடங்களுக்கு, மாணவர்களை தயார் செய்து, அதிலிருந்து வினாக்கள வராத பட்சத்தில், தேர்ச்சி சதவிகிதம் வெகுவாக சரியும்


*எனவே, எந்த பாடத்திலிருந்து, எத்தனை மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்பதையாவது, கல்வித்துறை விளக்க வேண்டும்


*இல்லாவிட்டால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளி மாணவர்களில், 15 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறுவதே கடினம். இவ்வாறு அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive