NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் 20 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட மருத்துவர் ஜெகன்மோகன் காலமானார்

jakanmohan

டாக்டர் தொழில் என்றாலே சேவை மனப்பான்மையுடன் உள்ள தொழில் என்று இருந்த நிலையில் அந்த தொழில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி 'ரமணா' படத்தில் வருவது போன்று பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் ஒருசில சம்பவங்கள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் டாக்டர் தொழிலை முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் செய்து வந்த 76 வயது ஜெகன்மோகன் என்ற டாக்டர் இன்று காலமானார். 1975ஆம் ஆண்டு வெறும் இரண்டு ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த இந்த டாக்டர் நேற்று வரை நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம் வெறும் ரூ.20தான். சென்னை மந்தைவெளியில் சந்திரா கிளினிக் என்ற பெயரில் டாக்டர் தொழிலை செய்து வந்த டாக்டர் ஜெகமோகன் இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் காலமானார்.
டாக்டரின் மறைவுச்செய்தியை அறிந்து மந்தவெளி பகுதியே சோகமானது. மக்கள் அவருடைய உடலை பார்த்து கண்ணீர்விட்ட காட்சி, அவர் டாக்டர் தொழிலை எந்த அளவுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்திருந்தார் என்பதை நிரூபித்துள்ளது.




2 Comments:

  1. பலரின் மனம் சாந்தியடையும்படி செய்த, ஐயாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன். ஆழ்ண்ட வருத்தங்களுடன்....

    ReplyDelete
  2. Really sad news and a role model for the society.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive